அதிகமான தரவு நிலையங்கள் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தியைப் பயன்படுத்தவுள்ளன
வாசிப்புநேரம் -

(படம்: CNA)
சிங்கப்பூரில் மேலும் அதிகமான தரவு நிலையங்கள் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தியைப் பயன்படுத்த விரும்புகின்றன.
நிலையங்களில் பெரிய அளவில் தரவுகள் கையாளப்படுவதால், அவை அதிக மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன.
ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு நிலையமும் 33 கிகாவாட்ஸ் (Gigawatts) மின்சக்தி வரை பயன்படுத்தும். அது கிட்டத்தட்ட 9 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கக்கூடிய அளவு.
Amazon, Meta போன்ற அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்கள், அணுச்சக்தியைக் கொண்டு தரவு நிலையங்களை இயக்குகின்றன. செயற்கை நுண்ணறிவுக்கான தேவை அதிகரிப்பதால் அவ்வளவு மின்சக்தி தேவைப்படுகிறது.
சிங்கப்பூரில், நிறைய நிறுவனங்கள் ஹைட்ரோஜன் (Hydrogen), சூரிய சக்தியின் பயன்பாட்டை அதிகரித்து கரிம வெளியேற்றத்தைக் குறைக்க முனைகின்றன.
அவை குறித்த சாத்தியங்களை ஆராயவும், தொழில்நுட்ப நிபுணத்துவத்தை மேம்படுத்தவும் ஆலோசனைக் கட்டமைப்பை நிறுவவும் அவை முயற்சி செய்கின்றன.

ஆதாரம் : CNA