Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

விபத்து, மரணம், காயம் - ஊழியர்களை லாரிகளில் ஏற்றிச்செல்வது தொடர்பான தகவல்கள் வேலையிடப் பாதுகாப்பு மதிப்பீட்டில் உள்ளதா?

வாசிப்புநேரம் -
ஊழியர்களை லாரிகளில் ஏற்றிச்செல்லும்போது ஏற்பட்டிருக்கும் விபத்துகளின் எண்ணிக்கை, மாண்ட ஊழியர்கள், காயமுற்றோர் எண்ணிக்கை ஆகிய தகவல்கள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

அந்தத் தகவல்கள் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மதிப்பீட்டின் கீழ் (Workplace Safety and Health assessment) சேர்த்துக்கொள்ளப்படலாமா என வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் ரேய்ச்சல் ஓங் (Rachel Ong) வினவினார்.

முதலாளிகள், ஊழியர்களின் பாதுகாப்பு, சுகாதார அபாயங்கள் குறித்து மதிப்பீடு செய்யும்போது அந்தத் தகவல்கள் பயனுள்ளதாக இருக்கலாம் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் (Tan See Leng) பதிலளித்தார்.

ஆனால் விரிவான ஆபத்து மதிப்பீட்டிற்கு அது போதாது என்றும் அவர் சொன்னார்.

ஆபத்துகளை மதிப்பிடும் திட்டங்களைத் தயாரிக்கும்போது முதலாளிகள் இடர் நிர்வாக நடைமுறைக் கோட்பாட்டை (Risk Management Code of Practice) வழிகாட்டியாகப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

அதில் பாதுகாப்பு ஆபத்துகளை எப்படி அடையாளம் காணலாம், ஒவ்வோர் ஆபத்தின் அளவு, அவற்றை எப்படித் தடுக்கலாம், எப்படிக் குறைக்கலாம் ஆகிய விவரங்கள் உள்ளன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்