Skip to main content
தட்சிணாமூர்த்தியின் மரண தண்டனையை நிறைவேற்றுவதில் ஏன் தாமதம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

தட்சிணாமூர்த்தியின் மரண தண்டனையை நிறைவேற்றுவதில் ஏன் தாமதம் - நாடாளுமன்றத்தில் விளக்கம்

வாசிப்புநேரம் -
போதைப்பொருள் கடத்தல் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட தட்சிணாமூர்த்தி காத்தையாவின் மரண தண்டனையை நிறைவேற்றுவதில் ஏன் தாமதம் ஏற்பட்டது என்று நாடாளுமன்றத்தில் விளக்கம் தரப்பட்டிருக்கிறது.

தண்டனை நிறைவேற்றபடவிருந்தபோது அவரின் குடும்பத்துக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டதா?

அவரைக் கடைசியாகச் சந்திக்கவோ தொலைபேசியில் அழைத்துப் பேசவோ குடும்பத்துக்கு அனுமதி வழங்கப்பட்டதா? என்ற கேள்விகள் இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டது.

அதற்குத் தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான திரு கா சண்முகம் எழுத்துபூர்வ பதில் கொடுத்தார்.

தட்சிணாமூர்த்தி காத்தையாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை செப்டம்பர் 25ஆம் தேதி நிறைவேற்றப்படத் திட்டமிடப்பட்டிருந்தது.

அவரின் குடும்பத்துக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் அவரைத் தினமும் சந்திக்கவும், கூடுதல் நேரம் சந்திக்கவும் அனுமதிக்கப்பட்டனர்.

செப்டம்பர் 24ஆம் தேதி இரவு அதிபரிடம் கருணை மனு சமர்ப்பிக்கப்பட்டதாக சிங்கப்பூர் சிறைச் சேவையிடம் தெரிவிக்கப்பட்டது.

அது தட்சிணாமூர்த்தியிடமும் அவரின் குடும்பத்திடமும் தெரிவிக்கப்பட்டது.

மறுநாள் மனு அதிபரால் முறையாகப் பரிசீலிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டதாக அதிபர் அலுவலகம் சிறைச் சேவையிடம் சொன்னது.

சிறைச் சேவை அத்தகவலைத் தட்சிணாமூர்த்தியிடமும் அவரின் குடும்பத்தினரிடமும் தெரிவித்தது.

அதன் பிறகு அன்றைய நாள் மதியம் நீதிமன்ற உத்தரவின்படி அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அமைச்சர் விளக்கம் தந்தார்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்