"நான் இன்னும் மரியாதையுடன் பேசியிருக்க வேண்டும்" - தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ
வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
ஹாங்காங் (Hong Kong) காற்பந்து விளையாட்டாளர்களையும் ரசிகர்களையும் "முட்டாள்கள்" என்று அவமரியாதையாகச் சொன்னதை மீட்டுக்கொள்வதாகக் கலாசார, சமூக, இளையர்துறைத் தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ (David Neo) கூறியிருக்கிறார்.
"நான் இன்னும் மரியாதையுடன் பேசியிருக்க வேண்டும்" என்றார் அவர்.
சிங்கப்பூர்த் தேசிய அணி ஆசியக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெற்ற ஆட்டத்துக்குப் பிறகு ஹாங்காங்கிலுள்ள காய் டக் (Kai Tak)விளையாட்டரங்கிலுள்ள உடைமாற்று அறையில் திரு நியோ சொன்ன வார்த்தை சமூக ஊடகங்களில் வெளியானது.
ஆட்டத்தில் சிங்கப்பூர் 2-1 என ஹாங்காங் அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தது.
ஆட்டத்துக்குப் பிறகு தேசிய அணி வீரர் இக்சான் ஃபாண்டி (Ikhsan Fandi) நேரலை செய்தார்.
"அருமையான ஆட்டம். அவர்களுக்கு (ஹாங்காங் அணிக்கு) கடும் சவால் கொடுத்துவிட்டீர்கள். ரசிகர்கள் அனைவரும் முட்டாள்கள், ஆட்டக்காரர்களும் அப்படித்தான்...முட்டாள்கள் மாதிரி விளையாடியுள்ளனர், ஆனால் நீங்கள் அனைவரும் சிங்கம் போன்று விளையாடியுள்ளீர்கள்" என்று ஆரவாரமாக இருந்த உடைமாற்று அறையில் திரு நியோ பேசியது நேரலையில் வெளியானது.
ஓர் அமைச்சராக இருந்துகொண்டு திரு நியோ இப்படிப் பேசுவது சரியல்ல என்று Instagram பயனீட்டாளர் ஒருவர் கருத்துத் தெரிவித்தார்.
அதற்கு "நான் இன்னும் கொஞ்சம் மரியாதையாக நடந்துகொண்டிருக்க வேண்டும்" என்று திரு நியோ பதில் தந்திருக்கிறார்.
"நான் பேசியதை மீட்டுக்கொள்கிறேன். ஹாங்காங் அணி உண்மையிலேயே கடும் சவால் கொடுத்தது. ரசிகர்கள் ஒட்டுமொத்த அணிக்குப் பக்கபலமாக இருந்தனர். அதனை மதிக்க வேண்டும்" என்று திரு நியோ மேலும் சொன்னார்.
உடைமாற்று அறையில் தாம் பதிவுசெய்த வேறொரு காணொளியைத் திரு நியோ தமது Facebook பக்கத்தில் பதிவிட்டார்.
CNA செய்தி தொடர்புகொண்டபோது திரு நியோவுக்கு இதில் கருத்துரைக்க வேறெதுவும் இல்லை என்று அவரது அலுவலகம் கூறிவிட்டது.

ஆதாரம் : CNA