Skip to main content
DBS கோளாறு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

DBS கோளாறு - சேவை மாற்றத்தின்போது தவறான நடவடிக்கை

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

DBS வங்கி தனது சேவைகளில் சில மாற்றங்களைக் கொண்டு வர முயன்றபோது எடுத்த தவறான நடவடிக்கையே அதன் சேவைகளில் இடையூறு ஏற்பட்டதற்குக் காரணம் என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் (Gan Kim Yong) கூறியிருக்கிறார். மார்ச் 19ஆம் தேதி ஏற்பட்ட DBS சேவை இடையூறு குறித்த விசாரணையில் அது தெரியவந்தது. சிங்கப்பூர் நாணய வாரியம், DBS வங்கியின் சேவை மாற்றும் நிர்வாகச் செயல்முறையைக் கண்காணித்து, வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கும் என்றும் திரு கான் சொன்னார். 12 மாத காலகட்டத்தில், எதிர்பாராத் தடங்கல் ஏற்பட்டால் அதைச் சரிசெய்ய வங்கிகள் நான்கு மணி நேரம் தான் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த விதிமுறை வங்கிகளின் முக்கிய சேவை அமைப்புகளுக்குப் பொருந்தும். அந்த வகையில் வங்கிகள் மீது சிங்கப்பூர் நாணய வாரியம் தெளிவான எதிர்பார்ப்பை வைத்துள்ளது. "வங்கிச் சேவையில் செயலிழப்பு ஏற்படும்போது, வங்கிகள் சேவைகளை விரைவாகவும் பாதுகாப்பாகவும் மீட்டெடுக்க வேண்டும்," என்று திரு கான் கூறினார். DBS சிக்கல் ஏற்பட்டபோது சுமார் ஒரு மணி நேரம் சேவைகள் வேலை செய்யவில்லை. வாடிக்கையாளர்கள் தங்கள் நிதி இருப்புகளைப் பார்க்கவும் மின்னிலக்க வழிகள் மூலம் பணம் செலுத்தவும் சிரமப்பட்டனர். அவர்களின் பணமும் நிதி இருப்பும் பாதுகாப்புடன் இருப்பதாக DBS உறுதியளித்தது.
 

ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்