Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

DBS PayLah! கட்டண முறையை ஜொகூர் பாருவிலுள்ள பிரபல பேரங்காடிகளில் பயன்படுத்தலாம்

வாசிப்புநேரம் -
DBS PayLah! கட்டண முறையை ஜொகூர் பாருவிலுள்ள பிரபல பேரங்காடிகளில் பயன்படுத்தலாம்

(படம்: DBS)

ஜொகூர் பாலத்தைக் கடந்தபின்னரே மலேசிய ரிங்கிட்டை எடுத்துவரவில்லை என்பதை உணர்கிறீர்களா? கவலை வேண்டாம். DBS PayLah! வாடிக்கையாளர்கள் இனி UnionPay QR குறியீடு வாயிலாகக் கட்டணங்களைச் செலுத்தலாம்.

மலேசியாவில் 150,000க்கும் அதிகமான வணிக முனையங்களில் அந்தக் குறியீடு ஏற்றுக்கொள்ளப்படுவதாக UnionPay பேச்சாளர் நேற்று (17 மார்ச்) தெரிவித்தார்.

எரிபொருள் நிலையங்கள், பேரங்காடிகள், ஜொகூர் பாருவில் சிங்கப்பூரர்கள் அதிகம் செல்லும் Paradigm Mall, KSL Mall, The Mall - Mid Valley Southkey முதலிய பிரபல பேரங்காடிகளும் அதில் அடங்கும் என DBS வங்கியின் பேச்சாளர் இன்று (18 மார்ச்) கூறினார்.

உலகின் 45 சந்தைகளில் உள்ள 40 மில்லியனுக்கும் அதிகமான வணிக முனையங்களிலும் இந்த UnionPay QR Code கட்டண முறை செயல்படும். ஆஸ்திரேலியா, சீனா, ஹாங்காங், ஜப்பான், கொரியா, தாய்லந்து, வியட்நாம் முதலியவை அதில் அடங்கும்.

வெளிநாட்டில் இருக்கும்போது QR குறியீட்டின் வாயிலாகக் கட்டணம் செலுத்தினால் DBS Paylah! செயலியில் நாணய மாற்று இயல்பாகவே நடந்துவிடும்.

அந்த நாணய மாற்று விகிதம் குறித்து CNA வங்கியிடம் கேட்டது.

அதற்குப் பதிலளித்த வங்கியின் பேச்சாளர்,
"பயனீட்டாளர்கள் பணம் செலுத்தும் முன், PayLah! செயலியிலுள்ள 'பரிவர்த்தனை மதிப்பாய்வின்கீழ்' ('Review Transaction') நாணய மாற்று விகிதத்தைப் பார்க்கமுடியும்" என்றார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்