Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

DBSஇன் இணையம் வழி பணம் அனுப்பும் சேவைக்கும் PayNow-UPI எனும் நேரடியாகப் பணம் அனுப்பும் சேவைக்கும் என்ன வித்தியாசம்?

வாசிப்புநேரம் -
உலகம் முழுவதும் ரொக்கப் பணப் பரிமாற்றம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

இருக்கும் இடத்திலிருந்தே ஒருவர் மற்றொருவருக்கு விரைவாகவும் பாதுகாப்பாகவும் நேரடியாகப் பணம் அனுப்பும் சேவைகள் அதிகரித்து வருகின்றன.

அவ்வரிசையில் புதிதாக இணைந்துள்ளது PayNow - UPI வசதி.

சிங்கப்பூரிலுள்ள DBS வங்கி, Liquid Group நிதித்தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றின் வாடிக்கையாளர்கள் கட்டங்கட்டமாக அந்த வசதியைப் பயன்படுத்தலாம்.

இந்தியாவிலுள்ள DBS India, ICICI, Axis, SBI எனப்படும் பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றின் வாடிக்கையாளர்கள் PayNow-UPI இணைப்பின்மூலம் பணம் அனுப்பவும் பெறவும் முடியும்.

ஏற்கனவே பல ஆண்டுகளாக DBSஇன் இணையம் வழி பணம் அனுப்பும் சேவை இருந்துவருகிறது. அதற்கும் புதிதாக அறிமுகமாகியிருக்கும் சேவைக்கும் என்ன வித்தியாசம்?

DBS வங்கியிடம் இருந்து தகவல்களைக் கேட்டறிந்தது 'செய்தி'.

DBSஇன் இணையம் வழி பணம் அனுப்பும் சேவை என்றால்?

📍வெளிநாட்டுக்குப் பணம் அனுப்பும் சேவை

📍பெரிய தொகையைக் கூட அனுப்பலாம்.

📍விரைவாகச் செய்யலாம்

📍பணம் பெரும்பாலும் அதே நாளில் சென்றடையும்

📍கட்டணம் இல்லை

2021ஐ காட்டிலும் 2022இல் இந்தியாவுக்கு DBS Remit சேவையைப் பயன்படுத்தி பணம் அனுப்பிய புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 63% உயர்ந்தது.


PayNow-UPI என்றால்?

📍சிங்கப்பூரிலுள்ள PayNow சேவை போன்றது

📍சிறிய தொகையை அனுப்பலாம்

📍மிக விரைவாகச் செய்யலாம்

📍பணம் உடனுக்குடன் அனுப்பப்படும்

📍சிங்கப்பூர் - தாய்லந்துக்கு இடையிலான PayNow-PromptPay-ஐ ஒத்திருக்கும்



PayNow-UPI சேவையை யார் பயன்படுத்தலாம்?

📍இப்போதைக்கு DBS/POSB வங்கிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் மட்டும் பயன்படுத்தலாம்.

📍இந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் இச்சேவை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் விரிவுபடுத்தப்படும்


எவ்வளவு பணம் அனுப்பலாம்?

DBSஇன் இணையம் வழி…

📍வெவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறு தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது

📍உதாரணத்திற்கு, இந்தியா: திங்கள் முதல் வெள்ளி வரை, நாளொன்றுக்கு 200,000 வெள்ளி (12,378,969 ரூபாய்) வரை பணம் அனுப்பலாம்


PayNow-UPI

📍ஒருமுறை 200 வெள்ளி (12, 378 ரூபாய்), ஒருநாளைக்கு 500 வெள்ளி (30, 947 ரூபாய்) என்ற உச்சவரம்பு விதிக்கப்பட்டுள்ளது.

📍மார்ச் மாத இறுதிக்குள் வரம்பு நாளொன்றுக்கு 1,000 வெள்ளியாக (61,894 ரூபாய்) உயர்த்தப்படும்

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்