Skip to main content
பொங்கோல் டிரைவ் புளோக்கின் கீழ்த்தளத்தில் ஆடவரின் சடலம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

பொங்கோல் டிரைவ் புளோக்கின் கீழ்த்தளத்தில் ஆடவரின் சடலம்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் பொங்கோல் டிரைவில் (Punggol Drive) உள்ள கழக புளோக்கின் கீழ்த்தளத்தில் 65 வயது ஆடவர் மாண்டுகிடக்கக் காணப்பட்டதாக 8 World செய்தித்தளம் தெரிவித்தது.

சம்பவத்தின் தொடர்பில் 59 வயதுப் பெண் ஒருவர் மனநலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சென்ற வியாழக்கிழமை (3 ஜூலை) காலை சுமார் 5:55 மணியளவில் பொங்கோல் டிரைவில் உள்ள புளோக் 654Cஇன் அடியில் ஓர் ஆடவர் படுத்து கிடப்பதாகப் புகார் கிடைத்தது என்று சிங்கப்பூர் காவல்துறை Channel 8 செய்தியிடம் தெரிவித்தது.

காவல்துறையும் குடிமைத் தற்காப்புப் படையும் சம்பவ இடத்துக்கு விரைந்தது. ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்பது உறுதிசெய்யப்பட்டது.

ஆடவரின் மரணம் கொலைச் சம்பவம் அல்ல என்று காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

காவல்துறை விசாரணை தொடர்கிறது.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்