Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

வேலைக்கு ஆள் சேர்ப்பதில் AIஇன் தாக்கம் குறைவு: அமைச்சர் ஜாஸ்மின் லாவ்

வாசிப்புநேரம் -
வேலைக்கு ஆள் சேர்ப்பதில் AIஇன் தாக்கம் குறைவு: அமைச்சர் ஜாஸ்மின் லாவ்

(படம்: CNA/Ili Mansor)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டால் வேலைக்கு ஆள் சேர்ப்பதில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை என்கிறார் தற்காலிக மனிதவள அமைச்சர் ஜாஸ்மின் லாவ் (Jasmin Lau).

படிப்பை முடித்து வேலை தேடும் பட்டதாரிகளுக்கும் வேலை தேடும் இளையர்களுக்கும் வேலைக் காலியிடங்கள் குறைந்து வருவது குறித்து நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதில் சொன்னார்.

சிங்கப்பூரில் வேலைக் காலியிடங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகத் திருவாட்டி லாவ் கூறினார்.

2025 டிசம்பர் : 77,700

2026 மார்ச்: 73,300

தொடக்கநிலை நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்களுக்கான (PMET) வேலைகள் அதிகரித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

2025 டிசம்பர்: 32,500

2026 மார்ச்: 32,800

செயற்கை நுண்ணறிவு பெரும்பாலும் வேலையை மாற்றியமைப்பதற்குப் பயன்படுவதாக அவர் விவரித்தார்.

10 நிறுவனங்களில் 3 நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகின்றன.

செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டால் வேலைக்கு ஆள் சேர்ப்பது 8 விழுக்காடு மட்டுமே குறைந்துள்ளதாக அமைச்சர் சொன்னார்.

படிப்பை முடித்து வேலை தேடவிருக்கும் ஊழியர்களுக்கும் வேலை தேடும் இளையர்களுக்கும் தொடர்ந்து மனிதவள அமைச்சு ஆதரவளிக்கும் என்றார் திருவாட்டி லாவ்.


 
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்