Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

மொரோக்கோ முறுக்கு, ஹென்னா வடிவங்கள் கொண்ட குக்கீஸ்.... தீபாவளிக்குப் புதுப்புது பலகாரங்கள்

வாசிப்புநேரம் -

தீபாவளி களை கட்டிவிட்டது!

பட்டாசு, புத்தாடை, அலங்காரம் இப்படி ஆயிரம் இருந்தாலும் விதவிதமாகப் பலகாரங்களைச் சுவைப்பதில் தான் பலருக்கு ஆனந்தம்.

வண்ணமயமான, விதவிதமான பலகாரங்கள்...
வாய்க்கு ருசியான தின்பண்டங்கள்.

இவ்வாண்டு மக்கள் விரும்பி வாங்கும் இனிப்புப் பலகாரங்கள் என்னவென்று கண்டறிந்தது "செய்தி".

அலங்காரக் குக்கீஸ்

தீபாவளி அலங்காரங்களை வீட்டில் செய்து பார்த்திருப்போம். ஆனால் குக்கீஸிலும் (Cookies) செய்யலாம் என்கிறார் merliz bitesஇன் உரிமையாளர் எலிசபெத்.

ஐசிங் (icing) பயன்படுத்தி குக்கீஸ் மீது தீபாவளியுடன் தொடர்புடைய அழகு வடிவங்களை உருவாக்குகிறார் .

மூவாண்டுகளாக இந்தத் தொழிலைச் செய்துவரும் இவர், "மக்களின் விருப்பத்திற்கே முன்னுரிமை," என்கிறார்.

யானை உருவம், அதில் ஹென்னா வடிவங்கள் (மருதாணி)கொண்ட குக்கீஸ்..... அதை மக்கள் அதிகம் ஆதரிக்கின்றனர் என்றார் எலிசபெத்.

வகைவகையான Kuih Dahlia

பல வகையான பலகாரங்களைச் செய்து விற்றாலும், மக்கள் அதிகமாகப் புதுமையை விரும்புவதாகச் சொல்கிறார், akshayabakes வியாபாரத்தை நடத்தும் கீதா.

biscoff tarts, புதுவகையான Kuih Dahlia ஆகியவற்றுக்கு வாடிக்கையாளர்களிடம் அமோக வரவேற்பு இருப்பதாக அவர் "செய்தி'யிடம் கூறினார்.

 

லட்டு-இதிலும் புதுமை

Motichur Ladoo Baklava - பாரம்பரியப் பலகாரமான லட்டில், பக்லாவா (Baklava) எனும் துருக்கியப் பலகாரத்தை இணைத்திருக்கிறார் pastrylove எனும் வியாபாரத்தைப் நிர்வகிக்கும் ஷீலா.

அது தவிர அவர் Rose Thandai Alfajores, Nankathai பிஸ்கட்டுகள் போன்ற பல புதிய இனிப்புப் பண்டங்களையும் தயாரிப்பதாகக் கூறினார்.

 

மொறு மொறு மொரோக்கோ முறுக்கு

மொரோக்கோ நாட்டு மசாலாக்களைப் பயன்படுத்தி மொறு மொறுவென்று முறுக்குத் தயாரிக்கிறார் The Baking Beard-இன் நிறுவனரான திவ்யன்.

முழுநேர வேலை செய்யும் இவர், தின்பண்டத் தயாரிப்பின் மீது கொண்டிருந்த ஆர்வத்தால் சொந்தமாக வியாபாரத்தைத் தொடங்கியதாகச் சொன்னார்.

ஆண்களும் சமையலில் சளைத்தவர்கள் இல்லை என்கிறார் இவர்.

முறுக்கு தவிர புதுவித சூஜி (Sooji) வகைகளையும் மக்கள் பெரிதும் விரும்பி வாங்குவதாக அவர் பகிர்ந்துகொண்டார்.

 

பழைமை, புதுமை, இவை இரண்டும் சேர்ந்த கலவை - எதுவாக இருந்தால் என்ன?

பலகாரங்களை ஒரு கை பார்க்கத் தானே தீபாவளி!
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்