Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் exclusive

ஆயிரம் ஜன்னல் வீடு.. அது அன்பு வாழும் கூடு... புத்தம் புது உறவுகளுடன் தீபாவளியைக் கொண்டாடும் புதுமணத் தம்பதியர்... களைகட்டும் தலை தீபாவளி!

வாசிப்புநேரம் -

தீபாவளி நமக்குப் பலவகைகளிலும் இன்பம் தரும் பண்டிகை.

அதைக் கொண்டாடுவதில் சில நடைமுறைகள் தொன்றுதொட்டுப் பின்பற்றப்படுகின்றன.

அவற்றுள் ஒன்றுதான் 'தலை தீபாவளி'.

புதுமணத் தம்பதி ஒன்றாய் இணைந்து கொண்டாடும் முதலாம் ஆண்டு தீபாவளியே - 'தலை தீபாவளி'.

இந்த ஆண்டு தலை தீபாவளி கொண்டாடும் தம்பதியர் சிலரின் அனுபவத்தைக் கேட்டறிந்தது 'செய்தி'......

முதல் தம்பதி தினேஷ்- சஷ்தினி

Related article image
"இரண்டு வருடங்கள் கழித்து இப்போதுதான் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் தீபாவளியை முழுமையாகக் கொண்டாட முடிகிறது. எல்லோரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்,"

என்று குரலில் உற்சாகம் காட்டினார் சஷ்தினி.
Related article image
"முதன்முறை என் மனைவி சஷ்தினி என் குடும்பத்துடன் சேர்ந்து தீபாவளியைக் கொண்டாடுவதை நான் மிகவும் இனிமையான தருணமாகக் கருதுகிறேன்,"

என்று புன்னகை ததும்பக் கூறினார் தினேஷ்.

அடுத்து...விஷ்ணு - சுதாசினி தம்பதி...
Related article image
"COVID-19 கிருமித்தொற்று தணிந்து வருகிற நிலையில், இந்த ஆண்டு தீபாவளி எல்லாரையும் மீண்டும் ஒன்றாக இணைக்கக்கூடிய பண்டிகையாக அமைந்துள்ளது,"

என்று குரலில் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர்.

இருந்தாலும் இந்த ஆண்டு தீபாவளியை இயன்றவரை எளிமையாகக் கொண்டாட திட்டமிட்டிருப்பதாக அவர்கள் கூறினர்.

அதன் அடையாளமாக தங்கள் மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்தளிக்கப் போவதாக தம்பதி தெரிவித்தனர்.

"மற்றவர்களுக்கு உதவவேண்டும், திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற பழக்கத்தை இந்தத் தலைதீபாவளியின் போது நாங்கள் இருவரும் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம்,"

என சுதாசினி உற்சாகமாகக் கூறினார்.
Related article image
"எங்கள் இருவர் வீட்டிலும் தீபாவளிக் கொண்டாட்டத்தில் வித்தியாசங்கள் இல்லை. இந்த ஆண்டு இருவீட்டார் குடும்பங்களும் இணைந்து கொண்டாடுவதே தனிச்சிறப்பாக நான் கருதுகிறேன். எங்கள் இருவருக்கும் புது அம்மாவும், அப்பாவும் கிடைத்துள்ளனர். எனவே புதுக் குடும்பாக இணைந்து தீபாவளியைக் கொண்டாடுகிறோம்,"

என விஷ்ணு கூறி புன்னகைத்தார்.

இந்த ஆண்டு தலைதீபாவளிக் கொண்டாடும் புதுமணத் தம்பதி அனைவருக்கும் 'செய்தி'யின் தீபாவளி நல்வாழ்த்துகள்!
 
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்