Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

வெளிநாடுகளில் உள்ள சிங்கப்பூரர்கள் தீபாவளியை எப்படிக் கொண்டாடுகின்றனர்?

வாசிப்புநேரம் -

தாய்நாட்டை விட்டு, வீட்டை விட்டு, குடும்பத்தை விட்டு பிரிந்திருக்கும் போது ஏக்கம் இருக்கத்தான் செய்யும்.

அதுவும் பண்டிகையின் போது, அந்த ஏக்கம் அதிகரிக்கக்கூடும்.

வெளிநாடுகளில் உள்ள சிங்கப்பூரர்கள் தீபாவளியை எப்படிக் கொண்டாடுகின்றனர்? என்பதை தெரிந்து கொண்டது 'செய்தி'.

தீபாவளி என்றால் முறுக்கு, சுஜி, டார்ட்ஸ் ஆகியவை நம் மனத்தில் தோன்றுவது வழக்கம்.

ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் வசிக்கும் சுகன்யா கணேசன் தீபாவளிக்காகப் பலவிதமான ருசியான பலகாரங்களைத் தயார் செய்து வைத்துள்ளார்.

முறுக்கிலேயே பல வகை...

அச்சு முறுக்கு, உளுந்து முறுக்கு, அரிசி முறுக்கு...

வாய்க்கு ருசியான தின்பண்டங்கள்...

தீபாவளியன்று காலையில் கோயிலுக்குச் செல்வது பலரின் வழக்கம்.

நாடு விட்டு நாடு சென்றாலும் கலாசாரத்தை விட்டுக்கொடுக்கமாட்டேன் என்கிறார் ஆஸ்திரேலியாவின் பேர்த் நகரில் வசிக்கும் கிருஷ்ணன் பிரகாஷ் நம்பியார்.
நியூ யார்க்கில் வேலை செய்யும் ஸ்ரீவத்சா நண்பர்களுடன் சேர்ந்து வாழை இலையில் சாப்பாடு உண்டதோடு மத்தாப்புக் கொளுத்தி தீபாவளியைக் குதூகலமாக கொண்டாடினார்.
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்