Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

தீபாவளியின்போது COVID-19 கிருமித்தொற்றைச் சமாளிக்க நீங்கள் என்ன செய்யலாம்?

வாசிப்புநேரம் -

தீபாவளி வந்தாச்சு!

கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகள் பெரும்பாலானவை தளர்த்தப்பட்டுவிட்டதால் ஈராண்டுக்குப் பின்னர் பலரும் உற்றார் உறவினருடன் சேர்ந்து தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட ஆவலாக இருக்கலாம்.

எனினும் அண்மையில் கிருமித்தொற்றக்கு ஆளானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நாம் பாதுகாப்பாக இருந்தால்தான், நம்மைச் சுற்றி இருப்போரைப் பாதுகாக்க முடியும்.

அதற்காக நாம் என்ன செய்யலாம்?

மூத்தோரையும் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களையும் அணுகும்போது முகக்கவசம் அணிந்துகொள்வது சிறந்தது என்று மருத்துவர் துளசி கூறினார்.

மூத்தோரும் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களும் கிருமித்தொற்றால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்று அவர் நினைவூட்டினார்.

கிருமித்தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க...

-கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள இடங்களைத் தவிர்ப்பது நல்லது. 

-கூட்டமாக இருக்கும் இடங்களில் முகக்கவசம் அணிந்துகொள்ளலாம். 

அதனால் முறையான வழிமுறைகளைக் கடைப்பிடிப்போம்.

தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்பாகக் கொண்டாடுவோம்!

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்