சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
தீபாவளி அன்பளிப்புப் பெட்டிகள் - வரவேற்பு எப்படி உள்ளது?

நாவூறும் தீபாவளிப் பலகாரங்கள்..
பலகாரங்களைச் சுவைப்பது ஒருபுறம் இருந்தாலும் மற்றவர்களுடன் அதைப் பகிர வேண்டும் என்று பலரும் விரும்புவர்.
அன்பளிப்பாகக் கொடுக்கும்போது அதனை அழகிய முறையில் கொடுப்பது முக்கியம்தானே..
அதற்காகவே இப்போது சில கடைகள் தீபாவளி அன்பளிப்புப் பெட்டிகளை விற்பனை செய்கின்றன.
தீபாவளிச் சிறப்புப் பலகாரங்கள் அந்தப் பெட்டியில் இருக்கும்.
ஹோட்டல்கள், உணவகங்கள் ஆகியவை ஏற்கனவே அது போன்ற அன்பளிப்புப் பைகளை விற்பனை செய்கின்றன.
இணைய வர்த்தகர்களும் இப்போது அந்த வியாபாரத்தில் இறங்கியுள்ளனர்.
அது பற்றிச் 'செய்தி' சில வர்த்தகர்களிடம் பேசி விவரங்களைச் சேகரித்தது.
அன்பளிப்புப் பெட்டிகளை வழங்க வேண்டும் என்ற யோசனை எப்படி வந்தது?

- மிஷானி Gifts_by_the_localseller உரிமையாளர், கோலாலம்பூர், மலேசியா

- சீ (Zee), aleesyah.sg உரிமையாளர், சிங்கப்பூர்

"என்னுடைய நண்பர்களுக்குத் தனித்துவமான அன்பளிப்புகளை வழங்க எண்ணினேன். தீபாவளிக்குப் பிறகும் அவர்கள் அந்தப் பொருள்களைப் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். அதனால் பலகாரங்களை மட்டும் கொடுக்காமல் அதை அன்பளிப்புப் பெட்டிகளில் கொடுக்க நினைத்தேன்"
ஷ்ரெயா ஜோஷி (Shreya Joshi), Curatemygiftbox உரிமையாளர், சிங்கப்பூர்
"தனிப்பட்ட முறையில் கொடுப்பது போன்ற உணர்வு"
பலகாரங்களைப் போத்தல்களில் வழங்குவது பாரம்பரியமாகப் பின்பற்றப்படும் ஒன்று என்று சீ குறிப்பிட்டார்.
அதில் ஒரு வகை பலகாரம்தான் இருக்கும்.
ஆனால் அன்பளிப்புப் பெட்டிகள் அப்படியல்ல.
பல தெரிவுகள் உள்ளன.. தனிப்பட்ட முறையில் அவற்றைத் தேர்ந்தெடுத்து ஒருவருக்கு அன்பளிப்பாக வழங்கலாம் என்றார் சீ.
தீபாவளி அன்பளிப்புப் பெட்டிகள் சிக்கனமான ஒன்று என மிஷானி கூறினார்.
வாடிக்கையாளர்கள் தங்களுடைய வரவு செலவைப் பொறுத்து அதற்கேற்ப அன்பளிப்புப் பெட்டிகளை வடிவமைத்துக் கொள்ளலாம் என்று கூறினார் ஷ்ரெயா ஜோஷி.
மலிவு விலை
"செய்தி" பேசிய இணையக் கடைகள் தங்களுடைய அன்பளிப்புப் பெட்டிகளை மலிவான விலையில் விற்பதாகத் தெரிவித்தன.
பிரபல ஹோட்டல்கள் விற்பனை செய்யும் தீபாவளி அன்பளிப்புப் பெட்டிகளின் விலையையும் 'செய்தி' கண்டறிந்தது.
சில தீபாவளி அன்பளிப்புப் பெட்டிகளின் விலை..
Shangri La ஹோட்டல் - $241.20 வரை
Shahi Maharani உணவகம் - $138 வரை
Raffles ஹோட்டல் - $74
ஆனால் இணையக் கடைகள் தங்களுடைய அன்பளிப்புப் பெட்டிகளைச் சுமார் 20 வெள்ளிக்குள் விற்பனை செய்கின்றன.
வாடிக்கையாளர்களிடையே வரவேற்பு நன்றாக இருப்பதாகவும் தீபத் திருநாள் நெருங்கும் நிலையில் இன்னும் அதிகமானோர் அவற்றை வாங்குவதாகவும் கடைகள் தெரிவித்தன.