சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
தீபாவளியன்று விளையாடக்கூடிய 'தீபாவளி' விளையாட்டுகள்

pixabay
ஈராண்டுகளுக்குப்பின் தீபாவளியைக் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் சூழக் கொண்டாடவிருக்கிறோம்.
குதூகலமும் உற்சாகமும் ததும்பும் நேரம்!
பலகாரம் பட்டாசைத் தாண்டி விளையாட்டுகளும் விளையாடலாமே!
மீடியகார்ப் 'செய்தி' செய்தியாளர்களின் கற்பனையில் உதித்த, தீபாவளியை மையமாகக் கொண்ட சில புதுமையான விளையாட்டுகள்.....
1. கண்ணுக்கு எட்டியது வாய்க்கு எட்டலையே!

முதல் நபரின் கரண்டியில் ஒரு சூஜி பிஸ்கட் வைக்கலாம். அதை அவர் கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு அடுத்தவரின் கரண்டிக்கு மாற்றவேண்டும். இதேபோல் நால்வருக்குள்ளும் பிஸ்கட் சுற்றிவரவேண்டும்.
இப்படி மூன்று முறை வெற்றிகரமாக சூஜி பிஸ்கட் சுற்றி வந்துவிட்டால் அந்தக் குழுவினரே வெற்றியாளர்கள்.
அவருக்குக் காத்திருக்கும் பரிசு....வேறு என்ன? சுஜி பிஸ்கட்தான்.
இது Connections விளையாட்டைப் போன்றது...சற்றே வித்தியாசமானது.
தீபாவளியை மையமாகக் கொண்ட வார்த்தைகளைப் பிரித்து அவற்றில் இரு பாதியையும் குறிக்கும் வெவ்வேறு படங்களைக் காட்டவேண்டும்.
கண்டுபிடிப்பவர் வெற்றியாளர். அவருக்கு லட்டு ஊட்டிப் பாராட்டலாம்.



ஒவ்வொருவருக்கும் ஒரு தட்டும் ஒரு பிய்த்துப் போட்ட ஜிலேபியும் கொடுக்கவேண்டும்.
நேரம் தொடங்கியதும் சுருள் சுருளாக இருக்கும் ஜிலேபித் துண்டுகளைக் கொண்டு தீபாவளியுடன் தொடர்புடைய ஏதாவது ஒரு பொருளின் வடிவத்தை உருவாக்க வேண்டும்.
(விளக்கு, மத்தாப்பு, அலங்காரம், பூ)
யார் முதலில் அழகான ஒரு வடிவத்தை உருவாக்குகிறார்களோ அவரே வெற்றியாளர்.
ஒரு முழு ஜிலேபி கொடுத்து அவர்களைப் பாராட்டவேண்டும்.

அதோடு கொஞ்சம் வண்ணப் பொடிகள், ஒரு பென்சில்.
மறக்காமல் தொடங்குவதற்குமுன் வேண்டாத செய்தித்தாள் அல்லது துணியைக் கீழே விரித்துக் கொள்ளுங்கள்.
5 நிமிடத்துக்குள் தாளில் அழகான கோலம் வரைந்து வண்ணப் பொடிகள் தூவி அலங்கரிக்க வேண்டும்.
அழகான ரங்கோலி உருவாக்கும் குழு "தீபாவளி ரங்கோலி ஸ்டார் குழு" என்ற பட்டத்தைப் பெறும்.