உற்சவம் 2025 - தீபாவளியை வரவேற்கவிருக்கும் 800 கலைஞர்கள்
வாசிப்புநேரம் -
(படம்: Facebook/LiSHA)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
தீபாவளிக் கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்த ஆண்டு
சிராங்கூன் சாலையில் உற்சவம் 2025 என்னும் மாபெரும் நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.
வரும் சனிக்கிழமை தீபாவளி ஒளியூட்டு நடைபெறும் நாளில் உற்சவ ஊர்வலமும் இடம்பெறும்.
அதற்கு வசதியாகச் சிராங்கூன் சாலையும் அதை ஒட்டியிருக்கும் சாலைகளும் மூடப்படும்.
சுமார் 800 கலைஞர்கள் அடங்கிய 25 குழுக்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்.
சிங்கப்பூரின் துடிப்பான இந்திய மரபுடைமையைப் பிரதிபலிக்கும் பல நிகழ்ச்சிகளை இந்த விழாக்காலத்தில் மக்கள் எதிர்பார்க்கலாம்.
சிராங்கூன் வட்டாரத்தை செப்டம்பர் 6ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 18 வரை தீபாவளி தோரணங்கள் அலங்கரிக்கும்.
உற்சவ ஊர்வலம் பல்லினக் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும்
இவ்வாண்டு ஒளியூட்டு நிகழ்ச்சியில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.
செப்டம்பர் 6ஆம் தேதி மாலை 6.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும்.
அனுமதி இலவசம்.

ஆதாரம் : Mediacorp Seithi