Skip to main content
ஆலையில் மாவை அரைத்துச் சுடும் பலகாரத்துக்குத் தனிச்சுவை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் exclusive

ஆலையில் மாவை அரைத்துச் சுடும் பலகாரத்துக்குத் தனிச்சுவை

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

தீபாவளி என்றால் பலகாரம் இல்லாமலா?

எத்தனை பலகாரம் இருந்தாலும் பலரும் முறுக்கைத் தான் தேடுவர்.

அச்சு முறுக்கு, தேன்குழல், நெய் முறுக்கு என எண்ணில் அடங்கா வகைகள்.

கடைகளில் விற்கப்படும் திடீர் மாவு வகைகளைக்கொண்டு வீட்டிலேயே முறுக்கு சுடலாம். அது சுலபம்.

எனினும் சிலர் மாவு ஆலைக்குச் சென்று மாவை அரைப்பதையே விரும்புகின்றனர்.

அவர்களில் சிலரிடம் பேச செல்வி மாவு ஆலைக்குச் சென்றது 'செய்தி'.

அரிசி, உளுந்து எவ்வளவு சேர்க்கலாம் என்ற முடிவு அவர்கள் கையில்.

அதுவே மாவின் பக்குவத்தையும் தன்மையையும் நிர்ணயிக்கும் என்றார் 'செய்தி'யிடம் பேசிய திருமதி கலைச்செல்வி.

"இப்படிச் செய்யும் முறுக்கை பிள்ளைகளும், நண்பர்களும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும் விரும்பிச் சாப்பிடுகின்றனர்.
அதில் ஒரு திருப்தி கிடைக்கிறது," என்கிறார் இவர்.

ருசியான, மொறுமொறு முறுக்குகளைச் சுட சிலர் காலங்காலமாகத் தனி செய்முறையையும் பின்பற்றுகின்றனர்.

பாட்டி, அம்மாவிடம் கேட்டதை அப்படியே பின்பற்றி அரைப்பதாகக் கூறினார் திரு சங்கரபாண்டியன்.

அவர்கள் பாரம்பரியத்தைக் கைவிடுவதில்லை; சிரமமும் பார்ப்பதில்லை.

மாவின் தன்மையைக் கூட பார்த்துப் பார்த்து கேட்டு வாங்குவதாகச் சொன்னார் திரு செந்தில்குமார்.

சில மாவுகள் கொரகொரப்பாக இருக்கவேண்டும் என்கிறார் இவர்.

இவர்களில் மாவின் பக்குவத்தில் கவனமாக இருக்கின்றனர்.

முறுக்கு செய்ய எத்தனையோ எளிய வழிகள் இருக்கலாம்.

இருந்தாலும்….சிலர் கைமணம் தேடுகின்றனர், முறுக்கிலும் பாரம்பரியம் காக்கின்றனர்.

மேலும் செய்திகள் கட்டுரைகள்