Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தீபாவளியை இப்படியும் கொண்டாடலாமா? - மனப்போக்கில் மாற்றம்..

புத்தாடைகள், விருந்து, கோயிலுக்குச் செல்வது...குடும்பத்தார், உறவினர்கள் அனைவரும் ஒன்றுகூடுவது...

வாசிப்புநேரம் -

புத்தாடைகள், விருந்து, கோயிலுக்குச் செல்வது...குடும்பத்தார், உறவினர்கள் அனைவரும் ஒன்றுகூடுவது...

இதுதான் தீபாவளி, பலருக்கு.

இருப்பினும், கிருமிப்பரவல் கட்டுப்பாடுகளால், தீபாவளியின் வழக்கமான அனுபவத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, தீபாவளிச் சூழலில், வீட்டிற்கு 5 பேர்வரை செல்ல முடியும்.

இப்போது அந்த எண்ணிக்கை 2 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

அதுகுறித்துச் சிலரிடம் விசாரித்தது, 'செய்தி'.

ஆண்டுதோறும் தீபாவளி அன்று, பாட்டி வீட்டில் ஒன்றுகூடி, உறவினர்களுடன் விருந்துண்பது 25 வயது நரினுக்கு வழக்கம்.

வீட்டிற்குப் பிள்ளைகளும், அவர்களது குடும்பங்களும் வரமுடியாது என்பது வருத்தமளிப்பதாக மூத்தோர் சிலர் கூறினர்.

"வேண்டுமென்றால், நானும் என் சம்பந்தியும் மட்டும் மகன் வீட்டுக்குச் செல்லலாம். அனைவரும் ஒன்றுகூடமுடியாது. கடந்த ஆண்டாவது குழு குழுவாகப் பிரிந்து செல்லமுடிந்தது" என்று 70 வயதாகும் திருமதி இந்திராணி சொன்னார்.

சிங்கப்பூரைப் பொறுத்தவரை, தீபாவளி, லிட்டில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளாமல் நிறைவுபெறாது.

அந்த அனுபவத்தைப் பிள்ளைகளுக்கு வழங்குவதிலும் தயங்க வேண்டியுள்ளதாகப் பெற்றோர் சிலர் கூறினர்.

ஆனால் தீபாவளி, தீபாவளிதான்.

பாரம்பரியங்களில் மாற்றம் இருக்காது.

அவற்றைச் செயல்படுத்தும் விதத்தில் வேண்டுமென்றால் மாற்றம் இருக்கலாம்.

புத்தாடைகளும் வாங்கலாம்... பலகாரங்களும் செய்யலாம்...சிறிய அளவிலேயே!

சிலர், மாற்று வழிகளை நாடுகின்றனர்.

"நாங்கள் ஆண்டுதோறும், முறுக்கு மாவைப் புதிதாக அரைப்போம். அதுவே, இவ்வாண்டு செய்தோம். ஆனால், வெளியே செல்வதைத் தவிர்க்க, நாங்கள் இணையம்வழி வாங்கிவிட்டோம்" என்று திரு.கல்யாண்குமார் கூறினார்.

சிலர், சிறு சிறு அம்சங்களில் திருப்தி பெறுகின்றனர்.

சிலரோ, தீபாவளிக்குப் புதுமையைச் சேர்க்க எண்ணுகின்றனர்.

உற்றார் உறவினரிடம் இருந்து பிரிந்திருந்தாலும், இப்படியும் தீபாவளியைக் கொண்டாடமுடியும்!

அனைவரும் ஒன்றாகக் கொண்டாடலாம்.

வீட்டில் இருந்தவாறு...

காணொளி அழைப்புகளுக்குத் தயாராகிவிட்டீர்களா? 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்