Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

'தீபாவளிக்கு நேரடி விற்பனையும் செய்வோம்!' - களத்தில் முன்கூட்டியே இறங்கும் இணைய விற்பனையாளர்கள்

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் கிருமிப்பரவல் காரணமாக ஈராண்டாகத் தீபாவளி உணர்வு சற்று மந்தமாக இருந்திருக்கலாம்.

லிட்டில் இந்தியாவில் ஓளியூட்டு இருந்தாலும் சிறப்பு விழாச் சந்தைகள் இல்லாதது ஒரு குறைபாடாக இருந்தது.

அன்றாட வாழ்க்கை ஓரளவுக்கு வழக்கநிலைக்குத் திரும்பியுள்ள நிலையில் வாடிக்கையாளர்கள் சிலர்  கடைகளுக்கு நேரடியாகச் சென்று ஆடைகளை வாங்க விரும்புவதாகச் 'செய்தி' அறிந்தது.

"இணையம்வழியாகவும் நிச்சயமாக வாங்கலாம். இருப்பினும் தீபாவளி உணர்வு வெளியே சென்று கடைகளைப் பார்க்கும்போதுதான் பூர்த்தியாகிறது,"
-  ரஞ்சீத்தா

"நானும் என் நண்பர்களும் ஏற்கனவே புத்தாடைகளை இணைந்து வாங்குவதற்குக் கடைகளுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளோம்,"
- துர்கா

இணையத்தில் முடங்கியிருந்த விற்பனையாளர்கள் பலரும் நேரடி விற்பனையில் ஈடுபடத் தயாராக உள்ளனர்.

"கடந்த 2 ஆண்டுகளாக இணையத்தில் வாங்கவேண்டிய நிலைக்குப் பலர் தள்ளப்பட்டனர். அதனால் விற்பனை சிறப்பாக இருந்தது. இந்த ஆண்டு இணையம் வழியாக மட்டும் விற்பனை செய்தால் வியாபாரம் பாதிப்படையலாம்,"

என்று Prachi's collection கடையை நடத்திவரும் அஷ்வினி சொன்னார்.

வாடிக்கையாளர்கள் ஆடைகளை நேரடியாக வாங்கும் அனுபவத்தை விரும்புவதாக Aashnaa கடையை நடத்தும் அனிதா கூறினார்.

தீவெங்கும் பல இடங்களில் அமைக்கப்படும் தீபாவளிச் சந்தை நிகழ்வுகளில் அவர் கடைகளை அமைக்கத் திட்டமிட்டுள்ளார்.

"மக்கள் ஆடைகளைத் தொட்டுப் பார்த்து அவற்றைத் தள்ளுபடியில் வாங்க விரும்புகின்றனர். சந்தைகளும் நல்ல விளம்பரத் தளங்களாக அமைவதால் நான் ஆடைகளை முடிந்தளவுக்குத் தள்ளுபடியில் விற்பதுண்டு,"

என்று அனிதா தெரிவித்தார்.

Mivi's boutique எனும் கடையை நடத்திவரும் சீமா, தம்முடைய வீட்டையே கடையாக மாற்றியுள்ளார்.

"இணையத்தில் தற்போது நிறையப் போட்டி உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு ஆடைகளை நேரடியாக வாங்கும் அனுபவத்தை வழங்க அவர்களை என் வீட்டுக்கு அழைப்பதுண்டு,"

என்று அவர் சொன்னார்.

அதற்காக முன்கூட்டியே ஆடைகளை அதிக எண்ணிக்கையில் வாங்கி வீட்டில் கடையை அமைத்ததாகச் செய்தி கேட்டறிந்தது.

இவ்வாண்டுத் தீபாவளி கடந்த ஆண்டைவிடப் பெரிய அளவில் இருக்கும் என்று ஏற்கனவே அறிந்த  Braham Anga கடையின் நிஷாலினி தீபாவளிக்குப் பல மாதங்கள் முன்பே ஏற்பாடுகளைத் தொடங்கிவிட்டார்.

"நான் முழுக் குடும்பமும் அணியக்கூடிய ஆடைகளை வடிவமைத்து விற்க எண்ணினேன். அதற்கு நான் இந்தியாவில் கைத்தறி நிலையங்களுக்கெல்லாம் நேரடியாகச் சென்றேன்,"

என்று நிஷாலினி சொன்னார்.

செலவுகளும் தீபாவளிச் சந்தைகளில் கடை அமைப்பதற்கான வாடகையும் அதிகமாக இருந்தாலும் அதற்கேற்ற அளவில் வியாபாரம் இருக்கும் என்று அவர் நம்புகிறார்.

தீபாவளிக்கு இன்னும் நாள் உள்ளது...

இணைய விற்பனையாளர்கள்  முன்கூட்டியே களத்தில் இறங்கியுள்ளனர்...

வழக்கமாக நேரடியாக வியாபாரம் நடத்தும் இந்திய ஆடை கடைகளுக்கு கடும் போட்டி அளிக்க அவை துணிந்துள்ளன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa