சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
"இது முதல் படி" - TikTok வியாபாரம் இன்று தீபாவளிச் சந்தை வரை வந்துள்ளது - ஜொகூர் வியாபாரிகள் நெகிழ்ச்சி
மலேசியாவின் ஜொகூர் மாநிலத்திலுள்ள பல இடங்களில் தீபாவளிச் சந்தைகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன.
வழக்கமான சந்தைகளைக் காட்டிலும் இந்த் ஆண்டு வியாபாரிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைக் காண முடிகிறது.
அவர்களில் சிலர் TikTok செயலியில் வியாபாரம் செய்துவந்தவர்கள்.
TikTokஇல் பகுதிநேரமாகத் தொடங்கிய வியாபாரத்தை இன்று தீபாவளிச் சந்தை வரை கொண்டுவர முடிந்ததை எண்ணி அவர்கள் 'செய்தி'யிடம் மகிழ்ச்சி தெரிவித்தனர்.