Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

இனிப்பான பலகாரம்.. கசப்பான போட்டி... கடைகள் எப்படிச் சமாளிக்கின்றன?

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பலகாரங்கள் இல்லாமல் தீபாவளி கிடையாது.

பலகாரக் கடைகள் தீபாவளிக்காகவே சிறப்பு விற்பனை செய்கின்றன.

அண்மையில் பல புதிய கடைகள் திறந்துள்ளன. போட்டி அதிகரித்துள்ளது.

இப்போது வீட்டில் சுட்டு விற்கும் கடைகளும் வந்துவிட்டன.

கடை என்றால் செலவு அதிகம். முக்கியமாக வாடகைச் செலவைச் சொல்லத் தேவையில்லை. ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே போகிறது.

அதிகரிக்கும் போட்டியையும் செலவினத்தையும் கடைக்காரர்கள் எவ்வாறு சமாளிக்கின்றனர்?

"விசுவாசமான வாடிக்கையாளர்கள்"

பல ஆண்டுகளாகக் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் விசுவாசமாக இருக்கும்போது அதிகரிக்கும் போட்டியின் தாக்கத்தைக் குறைக்க முடிகிறது என்று கடைக்காரர்கள் கூறினர்.

கடையின் முத்திரையையும் பலகாரங்களின் தரத்தையும் நன்கு அறிந்திருந்தால் கடைகளுக்கிடையே போட்டி அதிகரித்தாலும் வாடிக்கையாளர்களுக்குப் பஞ்சம் இருக்காது என்கின்றன அஜ்மீர், பாவா'ஸ் போன்ற கடைகள்.

பொருள்களின் விலை

பலகாரங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருள்களின் விலை அதிகரிப்பதால் பலகாரங்களின் விலையை அதிகரிக்கவேண்டிய நிலையில் இருப்பதாக கிங் முறுக்கு உரிமையாளர் கூறினார்.

விலை ஏறினால் வாடிக்கையாளர்கள் வாங்கத் தயங்குகின்றனர். அது ஒரு சிக்கல் என்றார் அவர். எனவே வாடிக்கையாளர்களைத் தக்க வைக்கும் வகையில் விலை இருப்பது முக்கியம் என்று அவர் சொன்னார்.

அதிகரிக்கும் வாடகை

வாடகை அதிகரித்துக்கொண்டே இருப்பதை ஒரு சவாலாக மூன்று கடைக்காரர்கள் குறிப்பிட்டனர். அதைச் சமாளிக்கப் பலகாரங்களின் விலையை உயர்த்தவேண்டியுள்ளது.

வீட்டில் பலகாரம் சுட்டு வியாபாரம் செய்பவர்களுக்கு வாடகை செலுத்த வேண்டிய தேவை இல்லை. வீட்டு வியாபாரம் சூடுபிடிக்கிறது.

புதுப்புது உத்திகள்

விதவிதமான, புதுவகையான பலகாரங்களைக் கடைகள் அறிமுகம் செய்கின்றன.

தற்போது பிரபலமாக இருக்கும் மாட்சா (matcha), பிஸ்கோஃப் (biscoff), குனாஃபே (kunafe), நட்டெல்லா (nutella) ஆகிய சுவைகளில் பிஸ்கெட்களைத் தயாரித்துத் தருகின்றன சில கடைகள்.

சிலர் சமூக ஊடகத்தை நாடுகின்றனர்.

TikTok, Instagram ஆகியவை பலகாரத் தளங்களாக மாறிவிட்டன.

என்ன போட்டி இருந்தாலும் பலகாரக் கடைகள் நீடித்து நிலைத்திருக்கும்.
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்