Skip to main content
Bloomberg பொய் சொன்னது: அமைச்சர் சண்முகம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

Bloomberg பொய் சொன்னது: அமைச்சர் சண்முகம்

வாசிப்புநேரம் -
Bloomberg பொய் சொன்னது: அமைச்சர் சண்முகம்

படம்: CNA

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

உள்துறை அமைச்சர் கா சண்முகம், Bloomberg செய்தி நிறுவனம் பொய் சொன்னதாக மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார். அவரும் மனிதவள அமைச்சர் டான் சீ லெங்கும் Bloomberg செய்தி நிறுவனம் மீது அவதூறு வழக்குத் தொடுத்துள்ளனர். வழக்கு விசாரணை இன்று இரண்டாவது நாளாக நடைபெற்றது. 2024ஆம் ஆண்டில் Bloomberg வெளியிட்ட கட்டுரை தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டது. சொத்துப் பரிவர்த்தனையில் தாங்கள் முறைகேடாக நடந்துகொண்டதாக அதில் தவறாய் கூறப்பட்டிருக்கிறது என்று அமைச்சர்கள் சொல்கின்றனர். Bloomberg செய்தியாளர்கள் முற்றிலும் வெளிப்படையாய் நடந்துகொள்ளவில்லை என்று நம்புவதாக அமைச்சர் சண்முகம் சொன்னார். கட்டுரை அவரைக் குறிவைத்து எழுதப்படவில்லை என்று Bloomberg கூறியது. திரு சண்முகம் அதை மறுத்தார்.
Bloomberg நிறுவனத்துக்குத் தவறான உள்நோக்கம் இருந்ததாக அவர் குறிப்பிட்டார். Bloomberg ஊழியர்களுக்கு இடையிலான மின்னஞ்சல்களில் அது வெளிப்பட்டதாக அவர் சொன்னார். ஆனால் ஆரம்பத்தில் திரு சண்முகத்தின் பெயர் கட்டுரையில் இல்லை என்று தற்காப்புத் தரப்பு வாதிட்டது. உயர்தர பங்களா வீடுகளின் பரிவர்த்தனை பற்றி ஊடகங்களில் பேசப்படுவதை அது சுட்டியது. எனினும் தமது சொத்துப் பரிவர்த்தனை நடந்த ஓராண்டுக்குப் பிறகு கட்டுரை வெளியிடப்பட்டதை அமைச்சர் சண்முகம் குறிப்பிட்டார். அந்தப் பரிவர்த்தனை தனிப்பட்ட விவகாரம் என்று அவர் வலியுறுத்தினார். விசாரணை நாளை தொடரும்.

ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்