Skip to main content
அதிகரித்தன மலேசிய காய்கறி, மீன் விலைகள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அதிகரித்தன மலேசிய காய்கறி, மீன் விலைகள்

மலேசியாவில் பெய்துவரும் பருவமழையால் அந்நாட்டில் மட்டுமல்ல, சிங்கப்பூரிலும் மீன் வகைகள், காய்கறிகளின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
அதிகரித்தன மலேசிய காய்கறி, மீன் விலைகள்

விலையேறின மலேசியக் காய்கறிகள்

மலேசியாவில் பெய்துவரும் பருவமழையால் அந்நாட்டில் மட்டுமல்ல, சிங்கப்பூரிலும் மீன் வகைகள், காய்கறிகளின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மலேசியாவிலிருந்து வரும் மீன், காய்கறி ஆகியவற்றுக்கு சிங்கப்பூரில் தட்டுப்பாடு ஏற்பட்டள்ளதாக பாசிர் பாஞ்சாங் மொத்த விற்பனை நிலையச் சங்கம் கூறுகிறது.

 

மலேசியாவிலிருந்து வரும் மீனின் தட்டுப்பாட்டால் விலைகள் கிடுகிடுவென்று ஏறிவிட்டதாக உள்ளூர் வியாபாரிகள்,  கூறுகின்றனர்.

 

கிலோவுக்கு சராசரி 4 வெள்ளிக்கு விற்ற மீன், இப்போது 7 வெள்ளிக்கு விற்கப்படுகிறது.

 

மலேசியாவில் பலத்த காற்று, கடும் மழை ஆகியவற்றால் மீன்பிடி தொழில் முடங்கியுள்ளது.

 

மீன் வரத்து 30 விழுக்காடு குறைந்துள்ளது என்கின்றனர் சிலர். மலேசிய காய்கறிகளுக்கும் தட்டுப்பாடு.

 

மழையால், மலேசியக் காய்கறிகள் அழுகிப் போகும் அபாயம்.

 

அதனால் சீனா, ஹாங்காங், தைவான் போன்ற இடங்களிலிருந்து வரவழைக்கப்படும் காய்கறிகளை இப்போது அதிகமாக வியாபாரிகள் விற்கின்றனர். 

 

மலேசிய மீன்கள், காய்கறிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தாலும், தற்போது ஆண்டிறுதி விடுமுறை காலம் என்பதாலும் அவற்றுக்கான தேவையும் குறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

 

விலை ஏற்றத்தை மட்டுப்படுத்த அது உதவியிருப்பதாக வியாபாரிகள் கருதுகின்றனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்