வசதி குறைந்த பிள்ளைகளுக்கு உதவிப் பொருட்கள்
தேசிய வளர்ச்சி அமைச்சர் திரு காவ் பூன் வான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

வசதி குறைந்த சிறுவர்களுக்கு உதவிப் பொருட்கள்
வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த 4க்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட 91 பிள்ளைகளுக்கு இன்று பள்ளிக்குத் தேவையான பொருட்கள் அடங்கிய பைகள் வழங்கப்பட்டன. வசதி குறைந்தவர்களுக்குத் திரும்பக் கொடுக்கும் முயற்சியின் ஓர் அங்கமாக அவை விநியோகிக்கப்பட்டன.
பையில் இருந்த பேனா, பென்சில், புத்தகங்கள் போன்ற பொருட்கள், குடியிப்பாளர்களால் தானம் செய்யப்பட்டவை.
சுமார் 45 குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் அதனால் பயன் பெற்றனர்.
Sembawang சமூக நிலையத்தைச் சேர்ந்த இளைய தொண்டூழியர்கள் அந்த பைகளை விநியோகித்தனர்.
தேசிய வளர்ச்சி அமைச்சரும், செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு காவ் பூன் வானும் இன்றைய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது பங்கை ஆற்றினார்.
பையைப் பெற்ற சிறுவர்கள், அது புதிய ஆண்டுக்குத் தங்களைத் தயார் படுத்த உதவும் என கூறினர்.