Deliveroo கைமாறியது... சிங்கப்பூரில் விநியோகச் சேவை தொடரும்
REUTERS/Carlo Allegri
This audio is generated by an AI tool.
உணவு விநியோக நிறுவனமான Deliveroo கைமாறியுள்ளது.
அமெரிக்காவின் ஆகப் பெரிய உணவு விநியோக நிறுவனம் DoorDash அதை வாங்கியுள்ளது.
Deliveroo நிறுவனம் சில நிதியாண்டுகளாக இழப்புகளைச் சந்தித்து வந்தது.
அது கடந்த நிதியாண்டில் முதல்முறையாக லாபம் ஈட்டியது.
2.9 பில்லியன் பவுண்ட் (5.03 பில்லியன் வெள்ளி) விலையில் Deliveroo நிறுவனத்தை வாங்கவிருப்பதாக DoorDash மே மாதம் கூறியிருந்தது.
இதனுடன் DoorDash 40க்கும் அதிகமான நாடுகளில் செயல்படவிருக்கிறது.
மாதந்தோறும் 50 மில்லியன் வாடிக்கையாளர்களுக்குச் சேவையாற்றும்.
சிங்கப்பூரில் வாடிக்கையாளர்கள் Deliveroo செயலியை வழக்கம்போல் பயன்படுத்தலாம்.