Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொருள்களை விநியோகம் செய்வோரைக் குறிவைத்து நடக்கும் மோசடிகள்

வாசிப்புநேரம் -

பொருள்களை விநியோகம் செய்வோரைக் குறிவைத்து மோசடிகள் மீண்டும் நடப்பதாகக் காவல்துறை எச்சரித்துள்ளது.

ஏப்ரல் மாதம் முதல் பலர் அத்தகைய மோசடிகளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறைந்தது 2,000 வெள்ளி நட்டம் ஏற்பட்டதாகக் காவல்துறை கூறியது.

முதல் வகை மோசடி:

- மோசடிக்காரர்கள் விநியோகம் செய்யும் நிறுவனங்களின் தளம் மூலம் கோரிக்கை அனுப்புவார்கள்.

- பின்னர் விநியோகம் செய்பவரைத் தொடர்புகொண்டு, கடைகளில் iTunes அன்பளிப்பு அட்டைகளை வாங்குவதில் உதவும்படியும் பிறகு அவற்றைக் கொடுக்கவேண்டிய இடத்தையும் அவர்கள் குறிப்பிடுவார்கள்.

- அட்டையை வாங்கியதற்கான ஆதாரமாக அதன் பின்னால் இருக்கும் குறியீட்டைக் கீறி, நிழற்படம் எடுத்துத் தனக்கு அனுப்புமாறு மோசடிக்காரர்கள் கேட்பர்.

- விநியோகம் செய்யும் நபர் அவ்வாறு செய்ததும், மோசடிக்காரர்களைத் தொடர்புகொள்ள முடியாது. வாங்கப்பட்ட அட்டைகளுக்குப் பணம் கொடுக்காமல் அவர்கள் காணாமல் போய்விடுவர்.

இரண்டாம் வகை மோசடி:

- இதில், விநியோகம் செய்பவர் செல்லவேண்டிய இடம் பணம் அனுப்பும் சேவையை வழங்கும் நிறுவனமாக இருக்கும்.

- அவரைத் தொடர்புகொள்ளும் மோசடிக்காரர், ஒரு குறிப்பிட்ட தொகையை வெளிநாட்டுக் கணக்கு ஒன்றுக்கு அனுப்புமாறு சொல்வார். அவ்வாறு செய்தால் அவருக்கு 100 வெள்ளி கிடைக்கும் என்று மோசடிக்காரர் கூறுவார்.

- தொகையை அனுப்பிய பின்னர் மோசடிக்காரர்களைத் தொடர்புகொள்ள முடியாது.

- செல்லவேண்டிய இடத்துக்குப் போனதும் அங்கு யாரும் இல்லை என்பது விநியோகம் செய்பவருக்குத் தெரியவரும். அனுப்பிய தொகையையும் திரும்பப் பெறமுடியாது.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்