Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

வேண்டுமென்றே வாடிக்கையாளரின் உணவைக் கீழே வீசிய உணவு விநியோகச் சேவை ஊழியர்... ஏன்?

வாசிப்புநேரம் -
வேண்டுமென்றே வாடிக்கையாளரின் உணவைக் கீழே வீசிய உணவு விநியோகச் சேவை ஊழியர்... ஏன்?

படம்: Video screenshot: TikTok/@bananagiant

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

உணவு விநியோகச் சேவை ஊழியர் வாடிக்கையாளர் ஒருவரின் உணவை வேண்டுமென்றே கீழே வீசியதாகச் சமூக ஊடகத்தில் காணொளி ஒன்று வெளியாகிவுள்ளது.

செங்காங் வட்டாரத்தில் அந்தச் சம்பவம் நடந்ததாகக் காணொளியைப் பகிர்ந்தவர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்டவர் தமது மின் சைக்கிளில் உள்ள பையிலிருந்த உணவுப் பொட்டலத்தைத் தரையில் வைப்பதை அதில் காணமுடிகிறது.

பிறகு அவர், தனது மின் சைக்கிளை உணவுப் பொட்டலத்தின்மீது தள்ளி விட்டார். சாஸ் நிறைந்த பை ஒன்றையும் தரையில் வீசினார்.

பிறகு உணவுப் பொட்டலத்தை மீண்டும் அவர் பையில் வைத்தார்.

சேதமடைந்த பொட்டலத்தைக் கண்டு வாடிக்கையாளர் உணவை நிராகரித்தால் அதை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் அவர் அவ்வாறு செய்திருக்கலாம் என்று இணையவாசிகள் சிலர் கருத்துகளைப் பகிர்ந்தனர்.

இன்னும் சிலர் அவர் இதுபோன்று ஏற்கனவே பலமுறை செய்திருக்கலாம் என்று ஊகித்தனர்.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்