DBS வங்கி தலைமையகத்துக்குப் போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவருக்குச் சிறை
வாசிப்புநேரம் -

(கோப்புப் படம்: AFP/Roslan Rahman)
DBS வங்கியின் தலைமையகத்துக்குப் போலியான வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்த ஆடவருக்கு 15 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு மே மாதம், ஆபத்து விளைவிக்கக்கூடிய ஒன்றைப் பற்றிப் பொய்த் தகவல் அளித்ததற்காக 34 வயது ஆங் செங் சின்னுக்குத் (Ang Cheng Shin) தண்டனை விதிக்கப்பட்டது.
விநியோக வாகனமோட்டியாகப் பணிபுரிந்த ஆங், 2023இன் கடைசியில் DBS வங்கியிடம் சுமார் 12,000 வெள்ளி கடன் வைத்திருந்தார்.
கடனைத் திருப்பிக் கொடுக்க தொலைபேசிவழி நினைவுபடுத்திய வாடிக்கையாளர் சேவை அதிகாரிகளிடம் வங்கியின் தலைமையகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கிறது எனப் பொய்யுரைத்தாக அரசாங்க வழக்கறிஞர் கூறினார்.

ஆதாரம் : CNA