சிங்கப்பூரில் தனியார் விமானங்களுக்கான தேவை அதிகரிப்பு

சிங்கப்பூரில் தனியார் விமானங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
COVID-19 நோய்ப்பரவலுக்கு முந்தைய காலத்துடன் ஒப்புநோக்க சாங்கி, சிலேத்தார் விமான நிலையங்களிலிருந்து தனியார் விமானங்கள் புறப்படும் எண்ணிக்கை சுமார் 30 விழுக்காடு உயர்ந்துள்ளது.
சிங்கப்பூர் வர்த்தக நடுவமாக இருப்பது அதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
2023 ஆண்டிறுதியில் சிங்கப்பூரில் 74 தனியார் விமானங்கள் இருந்தன.
2022ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 66.
2023ஆம் ஆண்டிறுதியில் வேறு சில ஆசிய நாடுகளில் எத்தனை தனியார் விமானங்கள் இருந்தன?
இதோ விவரம்.
இந்தோனேசியா: 56
மலேசியா: 45
தாய்லந்து: 41