Skip to main content
தங்கத்தின் விலை உயர்கிறது; மக்கள் வெள்ளியை நாடுகிறார்களா?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

தங்கத்தின் விலை உயர்கிறது; மக்கள் வெள்ளியை நாடுகிறார்களா?

வாசிப்புநேரம் -
தங்கத்தின் விலை அதிகரித்துக்கொண்டே போகிறது.

தங்கத்தைக் காட்டிலும் வெள்ளியின் விலை கட்டுப்படியானதாகத் தோன்றலாம்.

வெள்ளியின் விலை...
மக்கள் அதில் முதலீடு செய்கிறார்களா?

அது குறித்துச் சிலரிடம் கருத்துச் சேகரித்தது 'செய்தி'.

வெள்ளிப் பொருள்களை வாங்குவதை முதலீடாகக் கருதுகிறார் திருமதி சௌமியா.

குடும்பத்திற்கு வழிபாட்டுப் பொருள்கள், மகனுக்கு ஆபரணம் என்று அவர் வெள்ளியில் பணம் செலவிட விரும்புகிறார்.

மாறாகத் தங்கத்தில் முதலீடு செய்வதே வழக்கம்; வெள்ளிப் பொருள்களை வாங்குவதில்லை என்கிறார் திருமதி தர்ஷினி.

கடைக்காரர்களின் கருத்து என்ன?

தங்க விலை உயர்வதால் அதற்கு மாற்றாகச் சிலர் வெள்ளியில் முதலீடு செய்கின்றனர் என்றார் திரு பாலாஜி.

எனினும் தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் ஏற்ற இறக்கத்தைக் காணும் என்கின்றார் திரு ராம்.

உலக அளவில் தொழில்நுட்பத்திலும் உற்பத்தியிலும் வெள்ளி அதிகமாகப் பயன்படுகிறது.

அதன்படி வெள்ளியின் தேவை அதிகரிக்கிறது, விலை உயர்கிறது என்று திரு ராம் குறிப்பிட்டார்.

வெள்ளியின் விலை அதிகரிக்கும் போக்கு நீடிக்கும் என்கிறார் அவர்.

வெள்ளி வாங்கும்போது நாம் எதைக் கருத்தில்கொள்ளவேண்டும்?

வெள்ளிக் கட்டிகளை வாங்கினால் பொருள், சேவை வரி செலுத்தத் தேவையில்லை.

ஆனால் வெள்ளிப் பொருள்களுக்கு வரி பொருந்தும் என்றார் திரு ராம்.

சிங்கப்பூரர்களிடையே வெள்ளி மீதான ஆர்வம் குறையவில்லை.

சிலர் வெள்ளிப் பொருள்களை விரும்பிச் சேர்க்கின்றனர்.

மற்றுஞ்சிலர் அதை ஒரு சிறிய முதலீடாகக் கருதுகின்றனர்.

எனினும் அது தங்கத்திற்கு ஈடாகுமா என்ற கேள்வி இருக்கத்தான் செய்கிறது.
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்