சிங்கப்பூரில் சுற்றுலா வழிகாட்டிகள் போட்டித்தன்மையுடன் செயல்படப் பயிற்சி
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் சுற்றுலா வழிகாட்டிகளை நாடும் பயணக் குழுக்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது.
செயற்கை நுண்ணறிவாலும் சமூக ஊடகங்களாலும் பயணிகள் சொந்தமாகவே திட்டமிட்டுச் சிங்கப்பூரைச் சுற்றிப்பார்க்கின்றனர்.
அதனால் வழக்கமான சுற்றுலாக்களைத் தாண்டி வழிகாட்டிகள் புதிய வழிகளை நாடுகின்றனர்.
உரிமம்பெற்ற சுமார் 4,000 வழிகாட்டிகள் போட்டித்தன்மையுடன் செயல்பட ஏதுவாகச் சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம் அதன் பயிற்சிக்கான கட்டமைப்பை மேம்படுத்தியிருக்கிறது.
பயணிகளின் ஆர்வத்தைச் சுண்டியிழுக்கும் வண்ணம் கதைசொல்லும் திறனை மேம்படுத்திக் கொள்ள சுற்றுலா வழிகாட்டிகள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
மாறிவரும் காலத்துக்கு ஏற்ப தனிப்பட்ட அனுபவங்களை ஏற்படுத்திக்கொடுப்பதாகச் சுற்றுலா வழிகாட்டிகள் கூறுகின்றனர்.
சைக்கிள் பயணங்கள், இரவுநேரச் சுற்றுலா, மரபுடைமை நடை போன்றவற்றை அவர்கள் வழங்குகின்றனர்.
உணவின் மூலமாகவும் பயணிகளின் கவனத்தைக் கவரமுடிகிறது.
கம்போங் கிளாம், லிட்டில் இந்தியா, சைனாடவுன் போன்ற இடங்களில் கிடைக்கும் சுவையான உணவு வகைகளைக் கொண்டும் பயணிகளை ஈர்க்கலாம் என்கின்றனர் வழிகாட்டிகள்.