Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிறப்புக் கவனம் தேவைப்படுவோர் பொருள் வாங்குவதைச் சுலபமாக்கும் புதிய திட்டம்

வாசிப்புநேரம் -

கடைத்தொகுதிகள் என்றாலே சில நேரங்களில் கூட்ட நெரிசலும் இரைச்சலும் இருக்கவே செய்யும்.

இதுபோன்ற நேரங்களில் சிறப்புக் கவனம் தேவைப்படும் ஒருவர் பொருள்களை வாங்குவது சிரமமாக இருக்கலாம்.

இதைப் புரிந்துகொண்டு உருவாக்கப்பட்டுள்ளது ஒரு சிறப்புத் திட்டம்.

கடைகள் பொதுவாக அமைதியாகக் காணப்படுவது திங்கள், செவ்வாய் போன்ற வார நாள்களில்தான்.

விரைவில் இது நீட்டிக்கப்படவிருக்கிறது...

வாடிக்கையாளர் பற்றாக்குறையால் அல்ல...

சிறப்புத் தேவையுள்ள வாடிக்கையாளர்களுக்குச் சேவையாற்ற அந்த ஏற்பாடு.

குறிப்பிட்ட நேரங்களில் இதுபோன்ற அமைதியான பகுதிகள் அவர்களுக்காக ஒதுக்கப்படவிருக்கின்றன.

தொடர்புத் திறன் குறைபாடு இருப்போரும் முதுமை மறதி நோயால் பாதிக்கப்பட்டோரும் கடையில் பொருள் வாங்கும் அனுபவத்தைத் திட்டம் இனிதாக்கும்.

Frasers நிறுவனத்தின்கீழ் உள்ள 13 கடைத்தொகுதிகளில் திட்டம் செயல்படுத்தப்படும்.

கடைத்தொகுதிகளில் உள்ள சில கடைகள் முதுமை மறதி நோயால் பாதிக்கப்பட்டோருக்குச் சேவை வழங்கும் மையமாகவும் இயங்கும்.

'Paint It Forward' எனும் திட்டத்தின்வழி கோ சோக் தோங் Enable நிதி திட்டத்திற்கு நிதிவழங்கி உதவவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

உடற்குறையுள்ளோர் வரைந்த படங்கள் பங்கேற்பாளர்களுக்கு வண்ணப்பூச்சுகளுடன் வழங்கப்படும்.

திட்டத்தில் பங்கேற்கும் ஒவ்வொரு நபருக்கும் 10 வெள்ளி நிதியை நிறுவனம் கோ சோக் தோங் Enable நிதி திட்டத்திற்குக் கொடுக்கும்.

ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்