சிங்கப்பூரில் ஆக அதிகமாக 1,055 டெங்கிச்சம்பவங்கள் பதிவாகியுள்ளன

(படம்: Pixabay)
சிங்கப்பூரில் டெங்கிச் சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு வேகமாக அதிகரித்துவருகிறது.
இந்த அவசரக் காலக்கட்டத்தை நாடு எதிர்கொண்டாக வேண்டும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புறத் துணையமைச்சர் டெஸ்மண்ட் டான் (Desmond Tan) கூறியுள்ளார்.
சிங்கப்பூரில் இந்த வாரம் மட்டும் ஆக அதிகமாக 1,055 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அதிகபட்ச விழிப்புநிலையில் உள்ள வட்டாரங்களில் உட்லண்ட்ஸ் வட்டாரமும் ஒன்று.
அங்குக் கண்டறியப்பட்டுள்ள டெங்கிக் குழுமங்களின் எண்ணிக்கை 40விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்துள்ளது.
2 வாரங்களுக்கு முன்பு 200க்குக் குறைவாக இருந்த அந்த எண்ணிக்கை இப்போது 280க்குக் கூடியுள்ளது.
சுற்றுவட்டாரத்தில் கொசுப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
ஆனால் வீடுகளுக்குள் கொசுப் பெருக்கத்தைத் துடைத்தொழிப்பது ஒரு சவாலாகவே இருக்கிறது.
வீடுகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள பலர் முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.