Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

"சுற்றுச்சூழலுக்கு உகந்த நிதித்துறையில் மேலும் பல திறனாளர்களைச் சேர்ப்பது முக்கியம்"

வாசிப்புநேரம் -
"சுற்றுச்சூழலுக்கு உகந்த நிதித்துறையில் மேலும் பல திறனாளர்களைச் சேர்ப்பது முக்கியம்"

(படம்: PMO)

சிங்கப்பூர், சுற்றுச்சூழலுக்கு உகந்த நிதித்துறையில் மேலும் அதிகமான திறனாளர்களைச் சேர்க்கவேண்டும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் (Heng Swee Keat) கூறியுள்ளார்.

அவ்வாறு செய்தால், கூடுதல் வாய்ப்புகளைப் பெறலாம்; நாட்டின் பசுமை முயற்சிக்கும் அது ஆதரவாக அமையும் என்றார் அவர்.

NUS நீடித்த நிலைத்த, பசுமை நிதிக் கல்வி நிலையம் ஏற்பாடு செய்த மாநாட்டில் திரு. ஹெங் பேசினார்.

கரிம வெளியேற்றத்துக்குக் கட்டணம் விதிப்பது உட்பட பல்வேறு அம்சங்களில் நாடுகள் எவ்வாறு இணைந்து பணியாற்றலாம் என்பதை மாநாடு ஆராய்ந்தது.

சுற்றுச்சூழலை மேம்படுத்த நிறுவனங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு ஊக்கத்தொகை கிடைக்க உதவுவதிலும் கவனம் செலுத்தப்பட்டது.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்