Skip to main content
சிங்கப்பூரில் வனவிலங்குக் கடத்தல் கும்பல் இல்லை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் வனவிலங்குக் கடத்தல் கும்பல் இல்லை

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் வனவிலங்குக் கடத்தல் கும்பல் இயங்கவில்லை என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் (Chee Hong Tat) கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் லீ ஹுய் யிங் (Lee Hui Ying) கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் பதில் சொன்னார்.

சிங்கப்பூரில் வனவிலங்குக் கடத்தல் நடக்கிறதா, நடந்தால் அது துறைமுகங்கள், நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை எப்படி பாதிக்கும் என்று அவர் கேட்டார்.

வனவிலங்குக் கடத்தலுக்கு எதிராகச் சிங்கப்பூரில் எடுக்கப்படும் நடவடிக்கையைப் பற்றி அமைச்சர் விவரம் தந்தார்.

அனைத்துலகக் காவல்துறை (Interpol) 'Operation Thunder' எனும் நடவடிக்கையை மேற்கொண்டது.

அதன்கீழ் தேசிய பூங்காக் கழகம் (NParks) கடந்த ஆண்டு சிங்கப்பூர் நெடுகிலும் சோதனைகளை நடத்தியது.

அப்போது மொத்தம் 16 வனவிலங்கு உயிரினங்களின் கடத்தல்கள் முறியடிக்கப்பட்டன.

எனினும் சிங்கப்பூரில் கடத்தல் கும்பல் செயல்படுவதாக இதுவரை ஆதாரம் இல்லை என்று அமைச்சர் கூறினார்.

ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்