Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

சாங்கி விமான நிலையத்தில் டாக்சி, தனியார் கார்கள் எளிதாகக் கிடைப்பதில்லை - பயணிகள்

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் கிட்டத்தட்ட ஈராண்டுகள் சாங்கி விமான நிலையம் வெறிச்சோடிக் கிடந்தது.

COVID-19 எல்லைக் கட்டுப்பாடுகளால் இங்கு வந்த சுற்றுப்பயணிகள் அதிகமில்லை. வெளிநாடு சென்ற பயணிகளும் அதிகமில்லை.

டாக்சி ஓட்டுநர்களும் தனியார் வாடகைக் கார் ஓட்டுநர்களும் அங்குச் செல்வதைத் தவிர்த்துவிட்டனர்.

ஆனால் கடந்த ஆண்டு எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தது. 
 
மேலும் டாக்சிகளுக்குக் கூடுதலாக 3 வெள்ளி செலுத்தவேண்டும் என்ற நடைமுறை வரும் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும் டாக்சி கிடைப்பதில் இன்னமும் சிரமம் இருப்பதாகப் பயணிகள் கூறுகின்றனர். 

"எப்போதும் சிரமமாக இருக்கிறது. கார் கிடைத்தாலும் கட்டணம் மிகவும் அதிகம். அதிக நேரம் எடுக்கிறது,"

- ரஞ்சீதா

"உலகக் கிண்ணத்தின்போது பின்னிரவு நேரத்தில் ஒரு டாக்சி கூட கிடைக்கவில்லை. இரண்டு மணி நேரம் வரை காத்திருந்தேன்,"

- பிரியா

“நான் அண்மையில் கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் வரை காத்திருந்தேன். டாக்சி ஓட்டுநர்கள் பலர் வேலையை விட்டதால் பற்றாக்குறை இருப்பதாக என்னுடைய ஓட்டுநர் பின்னர் கூறினார்,"

- ஷாந்தினி

"சிரமம் இப்போது மட்டுமல்ல... டாக்சி அல்லது தனியார் வாடகைக் கார் எடுப்பது எப்போதுமே சவால்தான்,"

-  அகல்யா

"சிரமம் இப்போது மட்டுமல்ல... டாக்சி அல்லது தனியார் வாடகைக் கார் எடுப்பது எப்போதுமே சவால்தான்,"

-  அகல்யா

டாக்சி / தனியார் கார் ஓட்டுநர்கள் சொல்வது?

"விமான நிலையத்தில் வரிசையைப் பார்த்தால் நான் இடத்தை விட்டுப் புறப்பட்டுவிடுவேன். நேரத்தை வீணாக்க விரும்புவதில்லை,"

- ஷயிக்

"பயணிகளுக்காக விமான நிலையம் செல்வதில்லை. விமான நிலையத்தில் பயணிகளை விடவேண்டியிருந்தால், அங்கிருந்து புதிய பயணிகளை ஏற்றிவருவேன். சில நிமிடங்கள்தான் காத்திருக்கவேண்டும்,"

- ராமமூர்த்தி

ஓட்டுநர்கள் சொல்லும் காரணங்கள்?

<p>(படம்:&nbsp;AFP/Roslan Rahman)</p>

- மற்ற இடங்களில் வழக்க நிலை திரும்பிவிட்டது; பயணிகள் கிடைக்கின்றனர். அதனால் எரிபொருளை வீணாக்கி விமான நிலையம் செல்ல விரும்புவதில்லை. 

- விமான நிலையத்திற்குச் செல்லும் பயணிகள் இருந்தால் மட்டுமே ஓட்டுநர்கள் அங்கு செல்கின்றனர். வாரநாள்களில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. 

- மழைக் காலத்திலும் உச்ச நேரத்திலும் ஊருக்குள் டாக்சி, தனியார் வாடகைக் கார்களுக்குத் தேவை அதிகமுள்ளது. 

- விமான நிலையத்தில் தனியார் வாடகைக் கார்கள் காத்திருப்பதற்கு இடமில்லை. அதனால் ஓட்டுநர்கள் வேறு இடத்திற்குச் சென்றுவிடுகின்றனர்.  

- சாங்கி விமான நிலையத்திலிருந்து டாக்சி எடுப்போர் கூடுதலாக 3 வெள்ளிக் கட்டணம் செலுத்தவேண்டும். கட்டணத்தைத் தவிர்க்க விரும்பும் பயணிகளுக்குக் கார் கிடைப்பதில்லை.

சாங்கி விமான நிலையப் பயணிகள் எண்ணிக்கை முழுமையாக வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டால், நிலைமை சீராகும் என்று பயணிகள் நம்புகின்றனர். 
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்