Skip to main content
ஆசியானின் மின்னிலக்கப் பொருளாதாரம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ஆசியானின் மின்னிலக்கப் பொருளாதாரம் - 2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர்?

வாசிப்புநேரம் -
ஆசியானின் மின்னிலக்கப் பொருளாதாரம் - 2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர்?

படம்: Facebook/Josephine Teo

சிங்கப்பூர், ஆசியானின் வளரும் செயற்கை நுண்ணறிவுச் (AI) சந்தையில் வாய்ப்புகளை நாடும் நிறுவனங்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் முக்கிய நடுவமாக விளங்க விரும்புகிறது.

2030ஆம் ஆண்டுக்குள் ஆசியானின் மின்னிலக்கப் பொருளாதாரம் ஒரு டிரில்லியன் டாலரை எட்டக்கூடும் என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் தியோ கூறியுள்ளார்.

Nomura ஆசிய முதலீட்டுக் கலந்துரையாடலில் அவர் உரையாற்றினார்.

சிங்கப்பூரின் வலுவான செயற்கை நுண்ணறிவுச் செயல்முறை, நம்பகமான அரசாங்கம், வட்டார மின்னிலக்கத் தொடர்புகள் ஆகியவை தென்கிழக்காசியாவில் வர்த்தகங்களை விரிவுபடுத்த உதவும் என்று திருமதி தியோ கூறினார்.

AI வளர்ச்சிக்கான அடித்தளத்தை வலுப்படுத்துவதற்கான திட்டங்களை அவர் மாநாட்டில் முன்வைத்தார்.

தரவு நிலையங்களின் ஆற்றலை அதிகரிப்பது, AI நிர்வாகச் செயல்முறைக் கட்டமைப்புகளை உருவாக்குவது, AI திறன்கொண்ட ஊழியரணியை உருவாக்குவது உள்ளிட்ட முயற்சிகளை சிங்கப்பூர் எடுக்கவிருப்பதாகத் திருமதி தியோ சொன்னார்.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்