"AI பொறுப்பாகச் செயல்படுத்தப்பட வேண்டும்"
வாசிப்புநேரம் -
படம்: Envato
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் தியோ (Josephine Teo) செயற்கை நுண்ணறிவு (AI) இடர்களைச் சமாளிக்க சிங்கப்பூருக்கு நம்பிக்கைக்குரிய உதவி தேவை என்று கூறியிருக்கிறார்.
வெவ்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு விரிவாக்கம் காணும் நிலையில் சேர்ந்து செயல்படுவது முக்கியம் என்றார் அவர்.
ஜெனீவாவில் நடைபெற்ற AI for Good அனைத்துலக மாநாட்டில் திருமதி தியோ அவ்வாறு குறிப்பிட்டார்.
செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகரிக்கும் வேளையில் அது பொறுப்பான முறையில் செயல்படுத்தப்படவேண்டும் என்று திருமதி தியோ வலியுறுத்தினார்.
நாடுகள் நீண்டகாலச் செயற்கை நுண்ணறிவு ஆற்றலை வளர்க்கும் நிலையில் விவரமான முடிவுகளை எடுக்கப் புதிய அனைத்துலக ஆணைக்குழு உதவலாம் என்று அமைச்சர் தியோ சொன்னார்.

ஆதாரம் : Mediacorp Seithi