Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அங்காடிக் கடைக்காரர்களுக்கும் வியாபாரிகளுக்கும் மின்வணிகத்தில் ஈடுபட ஊக்குவிப்பு

வாசிப்புநேரம் -

தஞ்சோங் பகார், தியோங் பாரு சந்தைகளில் உள்ள அங்காடிக் கடைக்காரர்களுக்கும் வியாபாரிகளுக்கும் மின்வணிகத்தில் ஈடுபட ஊக்குவிப்பு கிடைத்திருக்கிறது.

தங்கள் பொருள்களை இணையத்தில் பட்டியலிட Lazada மின்வணிகத் தளத்திடமிருந்து அவர்களுக்கு உதவி கிடைத்துள்ளது. 

அதற்காகவே அமைக்கப்பட்டுள்ள தனிப்பட்ட இணையச் சந்தை மூலம் அவர்களின் வியாபாரம் பெருகக்கூடும்.  

இந்தக் காலத்தில் கையால் வரையப்பட்ட சேவல் ஓவியத்தைக் கொண்ட இத்தகைய கிண்ணங்களைப் பார்ப்பது அரிது.

இந்தத் தனித்துவமான பொருள்களைப் பற்றி மேலும் பலருக்குத் தெரியவரும் என்பது அங்காடிக் கடைக்காரர் Loo Lian Sengஇன் நம்பிக்கை.

அதனால்தான் தமது வாடிக்கையாளர் எண்ணிக்கையை மின்வணிகத்தின் மூலம் அதிகரிக்க அவர் திட்டமிட்டுள்ளார். 

தஞ்சோங் பகார், தியோங் பாரு சந்தைகளில் உள்ள அவரைப்போன்ற 50 கடைக்காரர்கள் அந்த முயற்சியில் இறங்கவுள்ளனர். 

தஞ்சோங் பகார்-தியோங் பாரு தொகுதியும் Lazada நிறுவனமும் கையெழுத்திட்டுள்ள உடன்பாட்டின்மூலம் அவர்கள் பயன்பெறுவர். 

Lazada தளத்தில் ஒதுக்கப்படும் தனிப் பக்கத்தின்மூலம் அவர்களின் பொருள்களை வாங்கலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்