Skip to main content
கேலாங் செராயின் பல மாடிக் கார் நிறுத்துமிடம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

கேலாங் செராயின் பல மாடிக் கார் நிறுத்துமிடம் - புதிய மின்னிலக்கக் காவலாளி

வாசிப்புநேரம் -
கேலாங் செராயின் பல மாடிக் கார் நிறுத்துமிடத்தில் புதிய அறிவார்ந்த மின்னிலக்கக் காவலாளி அறிமுகம் செய்யப்படும்.

அந்த முன்னோடித் திட்டத்தை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் வழிநடத்தும்.

முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சரும் உள்துறை மூத்த துணையமைச்சருமான டாக்டர் ஃபைஷல் இப்ராஹிம் (Faishal Ibrahim) facebookஇல் அதனைத் தெரிவித்தார்.

புளோக் இரண்டின் 3A தளத்தில் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுவதாகத் தமக்குக் கருத்துகள் கிடைத்ததாக டாக்டர் ஃபைஷல் சொன்னார்.

அதனால் குடியிருப்பாளர்களுக்கும் வருகையாளர்களுக்கும் சிரமம் ஏற்படக்கூடும்.

வாகனமோட்டிகள் அங்கு காத்திருக்காமல் வேறு இடத்துக்குச் செல்ல மின்னிலக்கக் காவலாளி சைகை காட்டும்.

அதனைப் பின்பற்றத் தவறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்