Skip to main content
புதியவர் தினேஷ் வாசு தாஸுக்கு துணையமைச்சர் பொறுப்புகள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

புதியவர் தினேஷ் வாசு தாஸுக்கு துணையமைச்சர் பொறுப்புகள்

வாசிப்புநேரம் -
புதியவர் தினேஷ் வாசு தாஸுக்கு துணையமைச்சர் பொறுப்புகள்

படம்: CNA/Marcus Mark Ramos

சிங்கப்பூர் அரசியலுக்குப் புதுவரவான திரு தினேஷ் வாசு தாஸுக்கு 2 அமைச்சுகளில் துணையமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

கலாசார, சமூக, இளையர் அமைச்சு, மனிதவள அமைச்சு இரண்டிலும் திரு தினேஷ் துணையமைச்சராகப் பொறுப்பேற்கிறார்.

தென்கிழக்கு வட்டார மேயர் பொறுப்பையும் அவர் ஏற்பார்.

25 ஆண்டுகளாக சிங்கப்பூர் ராணுவத்தில் பணிபுரிந்து brigadier-general பதவிக்கு உயர்ந்தவர் திரு தினேஷ்.

2020இல் சுகாதார அமைச்சில் சேர்ந்தார். COVID-19 காலக்கட்டத்தின்போது நெருக்கடிக்கால உத்திகள், இயக்கப் பிரிவில் திரு தினேஷ் இயக்குநராகப் பணியாற்றினார்.

கடந்த மே 3 பொதுத்தேர்தலில் மக்கள் செயல் கட்சி சார்பில் ஈஸ்ட் - கோஸ்ட் குழுத்தொகுதியில் திரு தினேஷ் போட்டியிட்டார்.

58.73 விழுக்காட்டு வாக்குகள் பெற்று அவரின் அணி வெற்றிபெற்றது.

அவர்களுடன் போட்டியிட்ட பாட்டாளிக் கட்சிக்கு 41.27 விழுக்காட்டு வாக்குகள் கிடைத்தன.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்