Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உடற்குறையுள்ளோர் வீட்டிலிருந்தே வேலை செய்வதற்கான அனுமதி வழங்கப்படுமா?

வாசிப்புநேரம் -
உடற்குறையுள்ளோர் வீட்டிலிருந்தே வேலை செய்வதற்கான அனுமதி வழங்குவது குறித்து மனிதவள அமைச்சு பரிசீலிக்குமா என்று நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ்டபர் டி சூஸா (Christopher de Souza) கேள்வி எழுப்பினார்.

நீக்குப்போக்கான வேலை நடைமுறை பயனுள்ளதாகவும் நிலையானதாகவும் இருக்க முதலாளிகள், ஊழியர்களின் தேவைகளையும் நிறுவன நடைமுறைகளையும் கருத்தில் கொள்ளவேண்டும் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் (Tan See Leng) கூறினார்.

உடற்குறையுள்ளோருக்கு வேலையிடத்தில் உரிய ஆதரவு வழங்க, முத்தரப்புப் பங்காளிகள் முதலாளிகளுக்கு உரிய வழிகாட்டியை உருவாக்குவர் என்று அவர் சொன்னார்.

உடற்குறையுள்ளோருக்குத் தொலைத்தொடர்பு ஏற்பாடுகளைச் செய்துகொடுக்க விரும்பும் முதலாளிகள் SG Enable திட்டத்தின் மூலம் உதவி நாடலாம் என்றும் டாக்டர் டான் கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்