வீடா? இரவு நேரக் கேளிக்கைக் கூடமா?
வீட்டிற்குள் நுழைந்ததும் இரவு நேரக் கேளிக்கைக் கூடத்தில் இருக்கும் உணர்வு..
வீட்டிற்குள் நுழைந்ததும் இரவு நேரக் கேளிக்கைக் கூடத்தில் இருக்கும் உணர்வு..
சுழலும் ஒளி விளக்குகளும் அதிரும் இசையும் வருகையாளர்களை மெய்மறக்கச் செய்கின்றன.
17 வயதிலிருந்தே திரு.விச்சுவிற்கு ஒளி விளக்குகளின்மீது தீராக் காதல்.
அவற்றை வைத்து வீட்டை இரவு நேரக் கேளிக்கைக் கூடம் போல அலங்கரித்துள்ளார்.
இரவு விடுதிகள் மூடப்பட்டுள்ள இந்தச் சூழலில், குடும்பத்துடன் அந்தச் சூழலை வீட்டில் அனுபவிக்க முடிவதாகத் திரு.விச்சு கூறுகிறார்.
அதற்கு ஆன செலவு 1,000 வெள்ளிக்கும் மேல்.
புக்கிட் பாத்தோக்கில் அமைந்துள்ள அந்த ஒளிரும் வீட்டுக்குச் சென்று 'செய்தி' மேல் விவரங்களைக் கண்டறிந்தது.
அதே நேரத்தில் தமிழ் வாசகங்கள் கொண்ட ஒளிவீசும் பலகைகளைத் தயாரிப்பதிலும் திரு. விச்சு ஆர்வம் காட்டுகிறார்.

தமிழில் ஒளிப்பலகை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் ஏற்பட்டது?
தமிழர்கள் தமிழில் வாசகங்களை வீட்டு வாசலில் மாட்டும்போது, அந்த இடத்திற்கு அழகு சேர்கிறது. நமது அடையாளமும் நிலைநிறுத்தப்படுகிறது. பலகையின் நீளம் 1.2 மீட்டரைத் தாண்ட முடியாது.

தமிழில் வாசகங்களைச் சுருக்கமாக இருக்கும், அந்த நீளத்திற்கு அது அழகாகப் பொருந்தும். ஆங்கிலத்தில் பல ஒளிவீசும் பலகைகளும் உள்ளன.

ஆனால் தமிழில் இதுவரை நான் பார்த்ததில்லை. அந்தக் குறையைப் போக்க தமிழில் ஒளிவீசும் வாசகங்களை உருவாக்கத் தொடங்கினேன்.

சமயம் தொடர்பான வாசகங்கள் கொண்ட பலகைகளைப் மக்கள் பெரிதும் விரும்புகின்றனர்.
ஒளிரும் தமிழ்ப் பலகை செய்வதற்கான நேரம்?
எனது வேலை நேரம் காலை, இரவு என மாறி மாறி வரும். காலை வேலை முடிந்த பிறகு, வீட்டிற்கு வந்ததும் பலகைகளைத் தயாரிக்கும் பணியை மேற்கொள்வேன். இரவு பணி என்றால் காலையில் பலகைகளை உருவாக்கும் வேலையைச் செய்வேன்.

அசையும் ஒளிவிளக்குகள் ஓர் இடத்திற்குப் பொலிவு சேர்த்து இதயத்திற்கு அமைதி தருவாகக் கூறுகிறார் 32 வயது திரு.விச்சு.
வேலைக்கு இடையில் இதற்கு நேரம் ஒதுக்குவதில் இன்பம் காண்கிறார் விச்சு. மனத்துக்குப் பிடித்ததைச் செய்வதில் கிடைக்கும் இன்பத்திற்கு ஈடாகுமா?