மின் சிகரெட்டுகளை அப்புறப்படுத்துங்கள்: அமைச்சர் ஓங் யீ கங்
வாசிப்புநேரம் -
(படம்: Health Sciences Authority)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
மின் சிகரட்டுகள் குறித்த புதிய சட்டம் நடைமுறைக்கு வரும் முன்பு அவற்றை அப்புறப்படுத்தும்படி சுகாதார அமைச்சர் ஓங் யீ கங் (Ong Ye Kung) கேட்டுக்கொண்டிருக்கிறார்.
மின் சிகரெட்டுகளில் Etomidate போன்ற சட்டவிரோத ரசாயனங்கள் இருக்கக்கூடும்.
எனவே அவற்றைப் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த மறுபயனீட்டுத் தொட்டிகள் அறிமுகம் செய்யப்படுவதாய் அமைச்சர் கூறினார்.
மறுபயனீட்டுத் தொட்டிகள் பூட்டப்பட்ட நிலையில் சுவர்கள்மீது இணைக்கப்பட்டிருக்கும்.
அவற்றிலிருந்து மின் சிகரெட்டுகளைத் திருடுவதைத் தடுக்க தொட்டிகள் அருகே கண்காணிப்புக் கேமராக்கள் உள்ளன என்றார் அமைச்சர்.
திட்டத்தின் மூலம் எத்தனை மின் சிகரெட்டுகள் சேகரிக்கப்படும் என்பது தெரியவில்லை; ஆனால் மின் சிகரெட்டுப் பழக்கத்தைக் கைவிட மக்களை ஊக்குவிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்று திரு ஓங் வலியுறுத்தினார்.
மின் சிகரெட்டுகளுக்கான மறுபயனீட்டுத் தொட்டிகள் பற்றி பொதுமக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் காணொளி வழி விளக்கம் தந்தார்.