Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இந்திய மரபுடைமை நிலைய ஆலோசனைக் குழுவின் முன்னாள் தலைவர் திரு. கோபிநாத் பிள்ளைக்கு மேன்மைக்குரிய சேவை விருது

வாசிப்புநேரம் -
இந்திய மரபுடைமை நிலைய ஆலோசனைக் குழுவின் முன்னாள் தலைவர் திரு. கோபிநாத் பிள்ளைக்கு மேன்மைக்குரிய சேவை விருது

சிங்கப்பூரின் தூதரான கோபிநாத் பிள்ளை

சிங்கப்பூரில் இவ்வாண்டு 6,200க்கும் மேற்பட்டோருக்குத் தேசிய தின விருது வழங்கப்பட்டுள்ளது.

அதில் மூவர் ஆக உயரிய மேன்மைக்குரிய சேவை விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

1968ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட அந்த விருது, சிங்கப்பூரில் வழங்கப்படும் ஆக உயரிய விருதுகளில் ஒன்று.

சிங்கப்பூரிலும் வெளிநாட்டிலும் சிறப்பான சேவையாற்றியோருக்கு அது வழங்கப்படுகிறது.

மேன்மைக்குரிய சேவை விருது பெற்றவர்களில் ஒருவர் இந்திய மரபுடைமை நிலைய ஆலோசனைக் குழுவின் முன்னாள் தலைவர் திரு. கோபிநாத் பிள்ளை (Gopinath Pillai).

84 வயதாகும் அவர் பொதுத் தூதராகப் பணியாற்றியபோது சிங்கப்பூர்-இந்திய உறவுகளை வளர்ப்பதில் முக்கியப் பங்காற்றினார்.

அரசாங்கச் சேவை ஆணையத் தலைவர் திரு. லீ ஸு யாங்கிற்கும் (Lee Tzu Yang), சுகாதார அமைச்சின் மூத்த அறிவியலாளரும் சுகாதாரப் பராமரிப்புத்துறை உருமாற்ற அலுவலகத்தின் நிர்வாக இயக்குநருமான முனைவர் டான் சோர் சுவானுக்கும் (Tan Chorh Chuan) மேன்மைக்குரிய சேவை விருது வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டுக்கான தேசிய தின விருதுகளைப் பெற்றவர்களின் முழு பட்டியலைப் பிரதமர் அலுவலகத்தின் இணையப்பக்கத்தில் பார்க்கலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்