Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

ஆண்களைவிடப் பெண்களுக்கு அதிக நேரத் தூக்கம் தேவையா?

வாசிப்புநேரம் -
பொதுவாகப் பெரியவர்களுக்குக் குறைந்தது 8 மணி நேரத் தூக்கம் அவசியம் என்று கேள்விப்பட்டிருப்போம்.

ஆண்களைவிடப் பெண்களுக்கே அதிக நேரத் தூக்கம் தேவைப்படுவதாக அண்மை ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

விழித்திருக்கும்போது பெண்களின் மூளை அதிகமாக வேலை செய்கின்றது.

அதனால் அதிலிருந்து விடுபடப் பெண்களின் மூளைக்கு அதிக நேரம் தேவைப்படுவதாக இங்கிலாந்தின் Loughborough பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்தது.

சுமார் 20 நிமிடம் கூடுதலாகத் தூங்குவதால்கூடப் பல பயன்கள் உள்ளதாக அதில் கூறப்பட்டது.

சுவாரஸ்யமாக இருக்கின்றதா?

இது குறித்து மேலும் தெரிந்துகொள்ள மருத்துவர் டாக்டர் பைசலைத் தொடர்புகொண்டது 'செய்தி'...

"தூங்கும் போக்கில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபாடு உள்ளது. அதற்கு இரு காரணங்கள் உண்டு.
 

😴கர்ப்பமும் பிள்ளைப் பராமரிப்பும்

😴சுரப்பிகளில் வேறுபாடு


பெண்களைவிட ஆண்கள் குறைவான நேரம் தூங்கினாலும் ஆண்களைவிடப் பெண்களின் தூக்கத்தில் அதிக இடையூறுகள் ஏற்படுகின்றன."

என்றார் டாக்டர் பைசல்.

போதுமான அளவு தூக்கமின்மையால் ஏற்படும் விளைவுகள்?

😴தொற்றுநோய் ஏற்படும் அபாயம்

😴இதய நோய்

😴உயர்-ரத்த அழுத்தம்

😴நீரிழிவு நோய்

😴உடல் பருமன்

😴மனச்சோர்வு

😴பதற்றம்

😴கவனச் சிதறல்


ஆண்களுக்கும் பெண்களுக்கும் சராசரியாக எவ்வளவு நேரத் தூக்கம் அவசியம்?

அது பலவற்றைப் பொறுத்துள்ளது என்றார் டாக்டர் பைசல்.

"வயது, உடல்நலம், செய்யும் வேலை, மனநலம் என அடுக்கிக்கொண்டே போகலாம். மாய எண் ஏதும் இல்லை" என்று அவர் சொன்னார்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்