Skip to main content
புகைமூட்டம்: N95 முகக்கவசம் அவசியமா?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

புகைமூட்டம்: N95 முகக்கவசம் அவசியமா?

வாசிப்புநேரம் -
புகைமூட்டம்: N95 முகக்கவசம் அவசியமா?
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் புகைமூட்டம் மோசமடைகிறது.

இந்நிலையில், வெளியே செல்லும்போதெல்லாம் N95 முகக்கவசம் அணிவது அவசியமா?

N95 முகக்கவசம்

புகைமூட்டத்தின்போது நுண்ணிய துகள்கள் அதிக அளவில் காற்றில் கலந்திருக்கும்.

அவை சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தலாம். கண், மூக்கு, தொண்டை ஆகிய பகுதிகளில் எரிச்சல் ஏற்படுத்தலாம்.

N95 முகக்கவசத்தைச் சரியாக அணிந்தால் 95 விழுக்காட்டு நுண்ணிய துகள்களைத் தடுக்கலாம் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

பிற முகக்கவசங்கள்

அறுவைச் சிகிச்சை முகக்கவசம் அல்லது துணியால் தயாரிக்கப்பட்ட முகக்கவசத்தை அணிந்தால் எளிதாகச் சுவாசிக்கலாம்.

ஆனால் N95 முகக்கவசம் அளவிற்கு அவை பாதுகாப்புத் தருவதில்லை.

அறுவைச் சிகிச்சை முகக்கவசமும் துணியால் தயாரிக்கப்பட்ட முகக்கவசமும் பொதுவாக இறுக்கமாக இருப்பதில்லை.

அதனால் இடுக்குகள் வழியாக நுண்ணியத் துகள்கள் நுழையலாம்.

N95 முகக்கவசம் - எவற்றைக் கருத்தில்கொள்ளவேண்டும்

முகக்கவசம் காலாவதியானால் அது தகுந்த பாதுகாப்பு வழங்காது.

அதனால் காலாவதியான முகக்கவசத்தைப் பயன்படுத்தக்கூடாது.

N95 முகக்கவசம் கிழியாமல்; உருக்குலையாமல் இருக்கிறதா என்பதையும் உறுதிசெய்யவேண்டும்.

N95 முகக்கவசம் - அனைவரும் பயன்படுத்தலாமா?

மூச்சுவிடச் சிரமப்படுவோர் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகே N95 முகக்கவசத்தை அணியவேண்டும்.

மூத்தோர், கர்ப்பிணிகள், இதயப் பிரச்சினை உடையவர்கள் உள்ளிட்டோரும் ஆலோசனை பெறவேண்டும்.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்