Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

நோயாளியின் கால் துண்டிப்பு... மருத்துவர் பணியிலிருந்து தற்காலிக நீக்கம்

வாசிப்புநேரம் -

வலது காலில் புண் ஏற்பட்டிருந்த நீரிழிவு நோயாளியை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பத்  தவறிய மருத்துவர் 13 மாதங்களுக்குப் பணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

நிபுணத்துவ மருத்துவரிடம் செல்லும்படி நோயாளியிடம் கூறவும் அவர் தவறினார். 

அந்த நோயாளி gangrene எனும் திசுக்கள் அழுகும்  நிலையால் அவதிப்பட்டார். 

2022ஆம் ஆண்டில் அவர் டாக்டர் லிம் கியொக் லியோங்கை (Lim Geok Leong) நாடினார். லிம் அவருக்குக் கிருமி எதிர்ப்பு மருந்தை மட்டும் வழங்கினார்.

நோயாளி மேலும் 4 முறை லிம்மை நாடினார்.

நோயாளியின் நிலைமையைச் சரியாகத் தீர்மானிக்காமல் தொடர்ந்து அதே மருந்தையே வழங்கினார்.

வேறு மருத்துவரை நாடிய பின்னர்தான் தமக்கு மிகவும் ஆபத்தான பிரச்சினைகள் இருப்பதை நோயாளி உணர்ந்தார்.

அவரது நிலைமை கட்டுக்கடங்காமல் மோசமடைந்துவிட்டதால் வேறு வழியின்றிக் கால் துண்டிக்கப்பட்டது.

அதன் விளைவாக அவர் நடமாடும் ஆற்றலை முற்றாக இழந்தார்.

திசுக்கள் அழுகும் அறிகுறி தெரிந்தால் உடனே நோயாளிகளை அவசர சிகிச்சைக்கு அனுப்பவேண்டும். அதுவே முறை என்று சிங்கப்பூர் மருத்துவர் மன்றம் கூறியது.

ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்