Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

8 ஆண்டுகளாக ஐஸ் போதைப்பொருளை உட்கொண்ட மருத்துவருக்குத் தொழில் செய்யத் தடை

வாசிப்புநேரம் -
Meth எனும் ஐஸ் போதைப்பொருளை 8 ஆண்டுகளாக வார இறுதியில் உட்கொண்ட மருத்துவருக்கு ஒழுங்கு நடவடிக்கைக் குழு தடை விதித்துள்ளது.

சனிக்கிழமைகளில் போதைப்பொருளை உட்கொண்ட அவர் திங்கட்கிழமைக்குள் அதன் தாக்கம் மறைந்துவிடும்; பணிபுரியும்போது போதையில் இருக்கவில்லை என்று விளக்கம் அளித்திருந்தார்.

டாக்டர் டேரன் லியோங் (Darren Leong) முழுமையாகப் பதிவு செய்யப்பட்ட மருத்துவர் பட்டியலிலிருந்து நீக்கப்படக் குழு உத்தரவிட்டது.

இனி அவரால் சிங்கப்பூரில் மருத்துவராகச் செயல்பட முடியாது.

மீண்டும் மருத்துவராகப் பணிபுரிய அவர் விண்ணப்பிக்கலாம். அப்படி அனுமதிக்கப்பட்டால் அவர் மேற்பார்வையாளரின் கண்காணிப்பில் செயல்பட வேண்டும். மேலும் மறுவாழ்வுத் திட்டத்தில் பங்கேற்க வேண்டும். சிங்கப்பூர் மருத்துவ மன்றத்திடம் அவர் பொறுப்பேற்புக் கடிதத்தையும் வழங்க வேண்டும்.

அவர் 2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாத்திலிருந்து மருத்துவராகப் பணிபுரிந்திருக்கிறார். ஆக அண்மையில் அவர் சாங்கி பொது மருத்துவமனையின் விளையாட்டு மருத்துவத் துறையில் பணிபுரிந்தார்.

2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மத்தியப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அவரை வீட்டில் கைது செய்தது.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்