Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பணிப்பெண்கள் துன்புறுத்தல் குறித்துப் பேச முன்வரவேண்டும்: மருத்துவர்கள்

வெளிநாட்டு இல்லப்  பணிபெண்கள் கட்டாய மருத்துவப் பரிசோதனைக்கு வரும்போது சந்தேகப்படும்படி அறிகுறிகள் கண்டறியப்பட்டால் அது குறித்து அவர்களிடம் நேரடியாக விசாரிக்கப்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

வாசிப்புநேரம் -

வெளிநாட்டு இல்லப் பணிபெண்கள் கட்டாய மருத்துவப் பரிசோதனைக்கு வரும்போது சந்தேகப்படும்படி அறிகுறிகள் கண்டறியப்பட்டால் அது குறித்து அவர்களிடம் நேரடியாக விசாரிக்கப்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் பணிப்பெண்கள் அதுகுறித்துப் பேச முன்வரவேண்டும் என்கிறார் Tayka மருத்துவக் குழுமத்தைச் சேர்ந்த மருத்துவர் கண்ணன் ரெங்கநாதன்.

எல்லாப் பணிப்பெண்களும் தங்கள் வேலை அனுமதியை புதுப்பிக்க ஆறு மாதத்துக்கு ஒரு முறை மருத்துவப் பரிசோதனைக்கு வந்தாகவேண்டும்.

சோதனையின்போது ரத்தப் பரிசோதனை, கர்ப்பப் பரிசோதனை செய்வோம். அதோடு எல்லோரையும் பார்ப்பது போலவே அவர்களுடைய உடல்நலம் எப்படி இருக்கிறது என்று பொதுவாகக் கேட்போம்.

தெளிவாக ஏதேனும் தளும்பு இருந்தால் அல்லது அடிபட்டதுபோல் அறிகுறிகள் தென்பட்டால் அதைப் பொறுத்து பரிசோதனை செய்வோம்.

மருத்துவர் கேட்கும் கேள்விக்கு பணிப்பெண் ஒழுங்காக பதில்சொன்னால், நிச்சயமாக உதவி செய்ய முடியும்.

அப்படி இல்லை என்றால் உதவி செய்வது கடினம்.

பிரச்சினை இருப்பது உறுதிசெய்யப்பட்டால் மனிதவள அமைச்சு வழங்கியிருக்கும் உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிப்பது இப்போதைய நடைமுறை என்று டாக்டர் கண்ணன் கூறினார்.

மருத்துவப் பரிசோதனையைத் தவிர்த்து பணிப்பெண்கள், அவர்களின் முதலாளிகள் ஆகியோருடைய நடத்தையும் கண்காணிக்கப்படும் என்கிறார் மருத்துவர் முகமது பைசால்.

எங்களுடைய நிர்வாக ஊழியர்களும் சூழ்நிலையைக் கண்காணிக்க எங்களுக்கு உதவிபுரிவார்கள்.

பணிப்பெண்கள் அல்லது அவர்களின் முதலாளிகள் சந்தேகத்துக்குரிய வகையில் நடந்துகொண்டால் அது குறித்து அவர்கள் எங்களிடம் தெரிவிப்பார்கள்.

அண்மையில் பணிப்பெண்ணைத் துன்புறுத்தி அவருக்கு மரணம் விளைவித்ததை மாது ஒருவர் ஒப்புக்கொண்டார்.

பணிப்பெண்களுக்குக் கொடுமை இழைக்கப்படுவதாகச் சந்தேகம் எழுந்தால் அது குறித்துப் புகார்செய்யும் மருத்துவர்களுக்கான கட்டமைப்பு மறுஆய்வு செய்யப்படவிருப்பதாக மனிதவள அமைச்சர் ஜோசஃபின் தியோ கூறியிருக்கிறார்.

அதனை மருத்துவர்கள் வரவேற்றுள்ளனர்.

வேண்டிய உதவியை மேலும் விரைவாகச் செய்ய அது வழியமைக்கும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa